ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கமலின் விக்ரம் படத்தை பாராட்டிய சல்மான் கான், சிரஞ்சீவி…

கமலின் விக்ரம் படத்தை பாராட்டிய சல்மான் கான், சிரஞ்சீவி…

சிரஞ்சீவி இல்லத்தில் சல்மான் கான், கமல், லோகேஷ் கனகராஜ்

சிரஞ்சீவி இல்லத்தில் சல்மான் கான், கமல், லோகேஷ் கனகராஜ்

Vikram Success : முதல் வாரத்தை முடித்துக் கொண்டு வெற்றிகரமாக 2வது வாரத்திற்குள் விக்ரம் படம் நுழைந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கமல் நடித்துள்ள விக்ரம் படத்தை பார்த்து, இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான் கான், தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கமல் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஐதராபாத்தில் வெற்றி விழாவை படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.

இந்நிலையில் கமல்ஹாசனை தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது வீட்டிற்கு அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வின்போது இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான் கான், விக்ரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க - ராயப்பேட்டையில் உள்ள கிளப் ஹவுஸில் தான் அந்த சந்திப்பு நடந்தது.. மனம் திறந்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா!

இதுகுறித்து சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது நீண்ட கால நண்பர் கமலின் விக்ரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதற்காக அவரை எனது இல்லத்திற்கு அழைத்து கவுரவப் படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்வின்போது எனது அன்பான சல்மான் கான் உடன் இருந்தது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. கமல் இதுபோன்ற வெற்றிகளை தொடர்ந்து குவிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் இணைந்திருந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு வெளியாகுவதற்கு முன்னரே அதிகம் காணப்பட்டது. அதற்கேற்ற வகையில் மினரல் வாட்டர் கேன் முதல், புர்ஜ் கலிஃபா டவர் வரையில் புரொமோஷனை படக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

இதையும் படிங்க - சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து நடித்த சீரியல் நடிகை.. ஃபோட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்டதால் தமிழகத்தில் படம் வெளியான முதல் 3 நாட்களுக்கு அதிகாலை காட்சிக்கு அனுமதி பெறப்பட்டது.

படத்தின் மீதான பாசிடிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கியதால், விக்ரம் வெளியிடப்பட்ட திரைகள் அதிகரிக்கப்பட்டன. இந்த நிலையில் முதல் வாரத்தை முடித்துக் கொண்டு வெற்றிகரமாக 2வது வாரத்திற்குள் விக்ரம் படம் நுழைந்துள்ளது.

வசூலில் 200 கோடியை உலகளவில் சர்வ சாதாரணமாக விக்ரம் கடந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தப் படம் ரூ. 500 கோடி வரை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by:Musthak
First published:

Tags: Vikram