தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் குணமடைவதற்கு ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.
கொரோனா முதலாம் மற்றும் இரண்டாம் அலையில் பாதிக்கப்படாத பெரும்பான்மை நடிகர்கள், மூன்றாவது அலையின் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சமீபத்தில் நடிகை திரிஷா, வடிவேலு, மகேஷ்பாபு, சத்யராஜ், விஷ்ணு விஷால் உள்ளிட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டில் கொரோனா இருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக மீண்டும் பரவல் அதிகரித்துள்ளது. இதையடுத்து, பெரிய பட்ஜெட் படங்கள், ரிலீஸ் தேதிகளை தாமதித்து வருகின்றன. கண்ணுக்கே தெரியாத கொரோனா, பல கோடி ரூபாய் பட்ஜெட் படங்களை முடக்கியுள்ளது.
இந்நிலையில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது-
Dear All,
Despite all precautions, I have tested Covid 19 Positive with mild symptoms last night and am quarantining at home.
I request all who came in contact with me over the last few days to get tested too.
அன்பானவர்களே, கொரோனா முன்னெச்சரிக் நடவடிக்கை அனைத்தையும் மேற்கொண்ட போதிலும், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றிலிருந்து எனக்கு லேசாக கொரோனா அறிகுறிகள் உள்ளன. நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் கடந்த சில நாட்களாக யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்களோ அவர்கள், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Published by:Musthak
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.