சிரஞ்சீவியின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘காட்ஃபாதர்’ திரைப்படம் 150 கோடி ரூபாயை தாண்டி வசூலித்துள்ளது. இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
சிரஞ்சீவி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஆச்சார்யா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து இந்த படத்திற்கு வாங்கிய ஊதியத்தில் 80 சதவீதத்தை சிரஞ்சீவியும், அவரது மகன் ராம் சரணும் படத் தயாரிப்பாளருக்கு திருப்பி அளித்தனர்.
இந்நிலையில் ஜெயம் ரவி அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில், சிரஞ்சீவி நடித்துள்ள காட்பாதர் திரைப்படம் அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாகி மிகப் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் நயன்தாரா, சல்மான்கான், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
கருப்பு வெள்ளை உடையில் கண்களை கவரும் ஷிவானி நாராயணன்..
மலையாளத்தில் வெளியான லூசிஃபர் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக காட்பாதர் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக இந்த படம் 100 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.
இந்த நிலையில் தற்போது காட்பாதர் திரைப்படம் 150 கோடி ரூபாயை தாண்டி வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஆச்சாரியா படம் கொடுத்த பின்னடைவில் இருந்து தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளார். இதனை அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
மீண்டும் சர்ச்சையில் மாட்டிய பீஸ்ட் பட நடிகர்… பெண் இயக்குனர்கள் பற்றி பேசியதால் சிக்கல்…
இன்னும் சில நாட்களில் சிரஞ்சீவி நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று காட்பாதர் படத்தின் அடுத்த பாகமு,ம் லூசிபர் இரண்டாம் பாகத்திற்கு பின்னர் உருவாக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tollywood