இளம் வயதில் பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்

இளம் வயதில் பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்
வேணு மாதவ்
  • News18
  • Last Updated: September 25, 2019, 2:05 PM IST
  • Share this:
கல்லீரல் பிரச்னை காரணமாக அவதிப்பட்டு வந்த பிரபல நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் உயிரிழந்தார். அவருக்கு வயது 39.

தெலுங்கு சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வேணு மாதவ். மிமிக்ரி கலைஞராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த இவர் 1996-ம் ஆண்டு சம்பரதாயம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

170 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், தமிழில் என்னவளே, காதல் சுகமானது உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மேலும் கடந்த டிசம்பர் மாதத்தில் தெலங்கானாவின் கோடாட் தொகுதியில் போட்டியிடவும் வேணு மாதவ் ஆர்வம் காட்டினார்.


இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக கல்லீரல் பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வேணு மாதவ், இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வீடியோ பார்க்க: என் நெஞ்சில் குடியிருக்கும்... நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சுகள்
First published: September 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading