Home /News /entertainment /

நடிகர், நடிகைகளுக்கு செக் வைத்த தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள்!

நடிகர், நடிகைகளுக்கு செக் வைத்த தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள்!

மாதிரி படம்

மாதிரி படம்

நடிகர் நடிகைகளுக்கு செக் வைத்த தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை. நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என முடிவு. 

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
திரைப்பட நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களின் உதவியாளர்கள் சம்பளத்தை அவர்களே கொடுக்க வேண்டும் என தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிவித்துள்ளது. 

தெலுங்கு திரை உலகில் நடிகர், நடிகைகள் சம்பளம் மற்றும் ஓ.டி.டி வெளியீடு ஆகியவற்றை ஒழுங்குமுறைபடுத்த வேண்டும் என வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கிய அந்த வேலை நிறுத்தம், இன்று வரை முடியவில்லை. இதனால் ஒரு மாதகாலமாக எந்த படங்களின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை.

இந்த நிலையில் தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை சில முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளது. அதில் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், தங்களின் உதவியாளர்களுடைய  சம்பளங்களை அவர்களே கொடுக்க வேண்டும். அத்துடன் உதவியாளர்கள் தங்குமிடம், உள்ளூர் பயணச் செலவு என எதையும் தயாரிப்பாளர்கள் ஏற்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளனர்.

மேலும் நடிகர்,  நடிகைகளுக்கு இனி திரைப்படங்களுக்கான சம்பளம் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்படும்.  நாட்கள் ரீதியில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படாது எனவும்  அறிவித்துள்ளனர். இதை தவிர,  திரைப்படங்களுக்கான ஒப்பந்தங்கள் முறையாக இருக்க வேண்டும். அனைத்து ஒப்பந்தங்களையும் திரைப்பட வர்த்தக சபையில் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றனர்.

Also read... தள்ளிச் சென்றது நயன்தாராவின் கோல்ட் படம் ரிலீஸ்!

அதே சமயம் நடிகர் -  நடிகைகள் தயாரிப்பாளர்களின் நலன் கருதி நேரம் மற்றும் தேதி ஒதுக்குதல் ஆகியவற்றை சரியாகப் பின்பற்றுதல் வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதைத் தவிர புதிய திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகு ஓ.டி.டியில் வெளியிடப்படும் என்ற முடிவை அறிவித்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி