Home /News /entertainment /

தெலுங்கு சினிமா படப்பிடிப்புகள் இன்று முதல் நிறுத்தம்… முக்கிய படங்களுக்கு சிக்கல்…

தெலுங்கு சினிமா படப்பிடிப்புகள் இன்று முதல் நிறுத்தம்… முக்கிய படங்களுக்கு சிக்கல்…

வேலை நிறுத்தம் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

வேலை நிறுத்தம் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

தெலுங்கு சினிமாவின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வகையில் கூட்டம் நடத்தி தேவையான முடிவுகள் எடுக்கப்பட்ட பின் மீண்டும் படப்பிடிப்புகள் துவக்கப்படும்.

    தெலுங்கு சினிமா படப்பிடிப்பு இன்றுமுதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முக்கிய படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொண்டுவரப்பட்ட பின் சினிமா தயாரிப்பு செலவுகள் அதிகரித்திருப்பது, நடிகர் நடிகைகள்  ஆகியோருக்கு கொடுக்கப்படும் அதிக சம்பளத்தை குறைக்க இயலாமல் திரைத்துறை திணறுவது, டிக்கெட் கட்டணத்தை உயர்த்த தெலுங்கானா ஆந்திரா ஆகிய மாநில அரசுகள் மறுப்பு தெரிவித்து வருவது, ஓ டி டி தளத்தில் திரைப்படங்கள் வெளியாவதால் விநியோகஸ்தர்களுக்கு ஏற்படும் இழப்பு, தொழிலாளர்கள் அதிக ஊதியம் கேட்டு போராட்டம் நடத்தியது ஆகியவை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இன்று முதல் திரைப்பட தயாரிப்பை நிறுத்துவது என்று தெலுங்கில் திரை உலகில் உள்ள 24 சங்கங்கள் கூட்டாக முடிவு செய்துள்ளன.

    இதனால் இப்போது தயாரிப்பில் இருக்கும் சுமார் 15க்கும் மேற்பட்ட திரைப்பட தயாரிப்பு பணிகள் இன்று முதல் நிறுத்தப்படும். இதன் காரணமாக தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தெலுங்கு துறை உலகம் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    ஜிகர்தண்டா 2 குறித்து முக்கிய அப்டேட்டை கூறிய கார்த்திக் சுப்புராஜ்

    கூடிய விரைவில் தெலுங்கு திரை உலகம் சந்தித்து வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வகையில் கூட்டம் நடத்தி தேவையான முடிவுகள் எடுக்கப்பட்ட பின் மீண்டும் படப்பிடிப்புகள் துவக்கப்படும். ஆனால் வழக்கம் போல் திரையரங்குகளில் படங்கள்  திரையிடப்படும்  என்று பஷீர் ரெட்டி அறிவித்துள்ளார்.

    Vijay: ஏர்போர்ட் கியூ-வில் விஜய்... வைரலாகும் படம்!

    படப்பிடிப்பு நிறுத்தப்படுவதால் தெலுங்கில் உருவாகும் முக்கிய படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று, புஷ்பா 2ம் பாகம், ஜூனியர் என்.டி.ஆர்., மகேஷ் பாபு படங்கள் உள்ளிட்டவை ஆரம்பிக்கப்படுவது தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Tollywood

    அடுத்த செய்தி