Home /News /entertainment /

தமிழ் எனது முதல் மொழி - தெலுங்கு நடிகையின் துணிச்சல் ஸ்டேட்மெண்ட்!

தமிழ் எனது முதல் மொழி - தெலுங்கு நடிகையின் துணிச்சல் ஸ்டேட்மெண்ட்!

லட்சுமி மஞ்சு

லட்சுமி மஞ்சு

சென்னையை மையப்படுத்தி தென்னிந்திய சினிமா இயங்கிக் கொண்டிருந்தபோது மோகன் பாபுவும் சென்னையில் தான் தங்கியிருந்தார். அப்போதுதான் லட்சுமி மஞ்சுவும் பிறந்தார்.

ரஜினியின் நண்பர்  நடிகர் மோகன்பாபுவின் மூத்த மகளும், நடிகையுமான   லட்சுமி மஞ்சு, தமிழ் எனது முதல் மொழி என தெரிவித்துள்ளார்.

லக்ஷ்மி மஞ்சு படங்கள் தயாரிப்பதுடன் நடிக்கவும் செய்கிறார். தெலுங்கு, தமிழ் உட்பட பல மொழிகளில் அவர் நடித்து வருகிறார். தமிழில் பிக் பாஸ் புகழ் தர்ஷன் நாயகனாக நடிக்கும் படத்தில் லக்ஷ்மி மஞ்சு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லஷ்மி மஞ்சு கடைசியாக நடித்த படம் ஜோதிகாவின் காற்றின் மொழி. அதற்கு முன் மணிரத்னத்தின் கடல் படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் நடித்திருந்தார்.

தமிழில் படம் நடிப்பது குறித்து கேட்டதற்கு, "தமிழை என்னுடைய முதல் மொழியாகவே நினைக்கிறேன். தமிழில் பேசுவதற்கு நான் எப்போதும் விருப்பப்படுகிறேன்" எனக் கூறியுள்ளார். சென்னையை மையப்படுத்தி தென்னிந்திய சினிமா இயங்கிக் கொண்டிருந்தபோது மோகன் பாபுவும் சென்னையில் தான் தங்கியிருந்தார். அப்போதுதான் லட்சுமி மஞ்சுவும் பிறந்தார். அவர் வளர்ந்ததும் சென்னையில் தான். அதனால் தமிழ் அவருக்கு சரளமாக வரும்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் காட்சிகளுக்காக நிஜமாகவே குடித்தாரா ஜீவா? வீடியோ உள்ளே!

"என்னுடைய தாய் மொழி தமிழ் இல்லை என்றாலும் தமிழில் பேசுவதற்கு நான் எப்போதும் விருப்பப்படுகிறேன்" என அவர் கூறியுள்ளார். தனது முதல் மொழியாக தமிழை கருதுவதாகவும் அவர் கூறியிருப்பது ஆச்சரியமானது.

நான் திமிர் பிடித்தவள் தான்... விமர்சனங்களுக்கு வனிதா விஜயகுமார் பதிலடி

தனது புதிய படம் குறித்து பேசியிருக்கும் அவர், இந்தப் படத்தில் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் இளைஞர்கள்.  நான் மட்டும்தான் சீனியர் நடிகை. அனிருத் படத்துக்கு  இசை அமைக்கிறார். இது ஒரு த்ரில்லர் திரைப்படமாக தயாராகிறது. இந்தப் படத்தில் முதல்முறையாக போலீசாக நடிக்கிறேன்.  இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், லஷ்மி மஞ்சுவின் தந்தையின் நெருங்கிய நண்பரான ரஜினிகாந்தின் பெயர் தான் இந்த படத்தில் லஷ்மி மஞ்சுவுக்கு தரப்பட்டுள்ளது. ஆம், படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் ரஜினி. பெயருக்கேற்ப நேர்மையான டிஜிபியாக  இதில் அவர் நடிக்கிறார். போலீசாக லட்சுமி மஞ்சு நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Rajinikanth, Tamil Cinema

அடுத்த செய்தி