தெலுங்கு நடிகர் ஷர்வானந்த் இந்த ஆண்டு திருமணம் செய்துக்கொள்ள தயாராகிவிட்டார். அவர் திருமணம் செய்துக் கொள்ளப்போகும் பெண், அமெரிக்காவை சேர்ந்த பத்மா என்ற தொழில்நுட்ப வல்லுநர் என்பது தெரிய வந்துள்ளது.
மறைந்த தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த போஜ்ஜலா கோபால கிருஷ்ணா ரெட்டியின் பேத்தி தான் இவர். இவர்களின் நிச்சயதார்த்தம் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறுவதாகவும், இந்த ஆண்டு கோடையில் திருமணம் நடைபெறும் என்றும் தெரிகிறது.
போஜ்ஜலாவின் குடும்பம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகவும் பிரபலமானது. பத்மாவின் தாய் மாமா போஜ்ஜலா சுதிர் ரெட்டியும் தற்போது அரசியலில் உள்ளார். போஜ்ஜலா கோபால கிருஷ்ணா ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சியில் அமைச்சராகப் பணியாற்றினார். ஸ்ரீகாளஹஸ்தி சட்டமன்றத் தொகுதியில் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஷர்வானந்த் மற்றும் பத்மா இருவரின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணமாகும். ஆனால் அவர் பல படங்களில் லவ்வர் பாயாக நடித்துள்ளது ஆச்சரியமாக இருக்கிறது. RRR நட்சத்திரம் ராம் சரண் மற்றும் ஷர்வானந்த் இருவரும் நெருங்கிய நண்பர்கள். அவருடைய நண்பர்கள் அனைவரும் திருமணமாகி செட்டில் ஆகிவிட்ட நிலையில், தற்போது ஷர்வானந்தும் திருமணத்துக்கு தயாராகிவிட்டார்.
விஜய்யின் தளபதி 67-ல் முக்கிய வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர்
38 வயதாகும் ஷர்வானந்த் தமிழில் எங்கேயும் எப்போதும், கணம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.