தமிழ் புத்தாண்டையொட்டி, தெலுங்கு சினிமா நட்சத்திரம் ராம் சரண் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது சமூக வலைதள பதிவு வரவேற்பை பெற்றுள்ளது.
தெலுங்கில் மெகா ஸ்டார் என அழைக்கப்படும் சிரஞ்சிவின் மகன் ராம் சரண், தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரை ரசிகர்கள் மெகா பவர் ஸ்டார் என்று அழைக்கின்றனர்.
ராம் சரண் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. அடுத்ததாக அவரும், தந்தை சிரஞ்சீவியும் நடித்துள்ள ஆச்சார்யா திரைப்படம் இம்மாதம் ரிலீஸாக உள்ளது.
இதையும் படிங்க - Beast: பீஸ்ட் டிக்கெட்டை பிளாக்கில் விற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது
இதற்கிடையே, பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வருகிறார். தொடர்ந்து அவரது சினிமா கெரியர் அடுத்தடுத்து வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க - ஏழை மாணவர்களை தேர்ந்தெடுத்து இலவச கல்வி வழங்கும் திட்டத்தை தொடங்கிய நடிகர் மோகன்லால்
இந்நிலையில் தமிழ்ப்புத்தாண்டையொட்டி ராம்சரண் தமிழில் வாழ்த்துப் பதிவை ட்விட்டரில் போஸ்ட் செய்துள்ளார். இது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தப் பதிவை 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றதால், தமிழ்நாட்டிலும் ராம் சரணுக்கு ஃபேன் பேஸ் உருவாகியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.