Home /News /entertainment /

இனி மீம்ஸ் போட்டால் 10 கோடி நஷ்ட ஈடு- பிரபல நடிகர் எச்சரிக்கை

இனி மீம்ஸ் போட்டால் 10 கோடி நஷ்ட ஈடு- பிரபல நடிகர் எச்சரிக்கை

விஷ்ணு மஞ்சு

விஷ்ணு மஞ்சு

தெலுங்கு திரையுலகை சேர்ந்த இரண்டு முன்னணி நடிகர்கள்தான் இதற்கெல்லாம் பின்னால் இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார. இந்த குற்றச்சாட்டு தெலுங்கு திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18
  • Last Updated :
தங்களது குடும்பத்தை பற்றி இனிமேல் யார் மீம்ஸ் போட்டாலும் அவர்கள் மீது 10 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப்படும் என தெலுங்கு மூத்த நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவை சில குடும்பங்கள் தான் ஆள்கின்றன. அதில் முக்கியமானது நாகார்ஜுன் குடும்பம், சிரஞ்சீவி குடும்பம், மகேஷ்பாபு குடும்பம், மோகன்பாபு குடும்பம், பாலகிருஷ்ணா குடும்பம். இதில் மோகன்பாபுவின் குடும்பத்தை சேர்ந்த விஷ்ணு மஞ்சு சமீபத்தில் நடந்த தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து பிரகாஷ்ராஜ் போட்டியிட்டார். பிரகாஷ்ராஜை வீழ்த்தி விஷ்ணு மஞ்சு வெற்றி வாகை சூடினார்.

இந்நிலையில் மோகன் பாபு நடித்த சன் ஆஃப் இந்தியா திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அந்த படத்தை சகட்டுமேனிக்கு இணையத்தில் ட்ரோல் செய்தனர். மீம்ஸ் போட்டு கலாய்த்தனர். இதனால் கடுப்பான விஷ்ணு மஞ்சு, ரசிக்கக்கூடிய மீம்ஸ்களை நாங்களும் ஜாலியாகவே எடுத்துக் கொள்வோம். ஆனால் எங்கள் குடும்பத்தை பற்றி விமர்சித்தால் இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கும் தொடரப்படும் என்று கூறினார்.

மேலும், தெலுங்கு திரையுலகை சேர்ந்த இரண்டு முன்னணி நடிகர்கள்தான் இதற்கெல்லாம் பின்னால் இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார. இந்த குற்றச்சாட்டு தெலுங்கு திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also read... மகேஷ்பாபு படத்தில் வில்லனாக நடிக்கும் விக்ரம்...?

நடிகர் சங்க தேர்தலில் விஷ்ணு மஞ்சுவுக்கு எதிராக போட்டியிட்ட பிரகாஷ்ராஜை சிரஞ்சீவி வெளிப்படையாக ஆதரித்தார். அதேபோல் நாகார்ஜுனனும் பிரகாஷ்ராஜை ஆதரித்தார்.

விஷ்ணு மஞ்சு இந்த இரு நடிகர்களையும் தான் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்ற பேச்சு தெலுங்கு திரையுலகில் எழுந்துள்ளது. நடிகர் மோகன்பாபு ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர். இருவரும் வாடா போடா என பேசிக் கொள்ளும் அளவிற்கு நெருக்கமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி