’சூரரைப் போற்று’ அப்டேட் கொடுத்த சூர்யா!

சூரரைப் போற்று படத்தில் நீங்கள் இடம்பெற்றிருப்பதற்கு நன்றி. நீங்கள் இடம்பெற்றிருப்பதன் மூலம் நான் கற்றுக் கொள்வதற்கு மிகச்சிறந்த வாய்ப்பாக இந்தப் படம் அமைந்துள்ளது

news18
Updated: June 16, 2019, 8:02 PM IST
’சூரரைப் போற்று’ அப்டேட் கொடுத்த சூர்யா!
நடிகர் சூர்யா
news18
Updated: June 16, 2019, 8:02 PM IST
சூரரைப் போற்று படம் குறித்த முக்கிய தகவலை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

என்.ஜி.கே, காப்பான் படத்தைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது. சென்னை, சண்டிகர் உள்ளிட்ட இடங்களில் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் மோகன்பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மோகன் பாபு குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் நடிகர் சூர்யா, “சூரரைப் போற்று படத்தில் நீங்கள் இடம்பெற்றிருப்பதற்கு நன்றி. நீங்கள் இடம்பெற்றிருப்பதன் மூலம் நான் கற்றுக் கொள்வதற்கு மிகச்சிறந்த வாய்ப்பாக இந்தப் படம் அமைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். ஹாலிவுட் பட சண்டைப் பயிற்சியாளர் க்ரேக் பாவல் இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகளை அமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்கிறார் சூர்யா.
Loading...
வீடியோ பார்க்க: எதிரும் புதிருமாய் வசனங்களால் சீண்டிய தல VS தளபதி!

First published: June 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...