• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’கட்சிகள் தாண்டிய தலைவராக உயர்ந்திருக்கிறார்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய நடிகர் சிரஞ்சீவி!

’கட்சிகள் தாண்டிய தலைவராக உயர்ந்திருக்கிறார்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய நடிகர் சிரஞ்சீவி!

சிரஞ்சீவி - மு.க.ஸ்டாலின்

சிரஞ்சீவி - மு.க.ஸ்டாலின்

நேற்று தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தமிழக முதல்வரை பாராட்டி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், இன்று தெலுங்கின் உச்ச நட்சத்திரம் சிரஞ்சீவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்திருக்கிறார்.

  • Share this:
    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி சென்னையில் இன்று சந்தித்தார்.

    தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் பதவியேற்றார். கொரொனா தொற்று உச்சத்தில் இருந்த அந்த சமயத்தில் தனது சீரிய முயற்சியால், படிப்படியாக தொற்று எண்ணிக்கையைக் குறைத்தார். தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி, தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் மக்கள் எண்ணிக்கையை அதிகரித்தார்.

    இதையடுத்து மு.க.ஸ்டாலினின் நிர்வாகத் திறனை அனைவரும் பாராட்டினர். பிரபல ஊடகத்தின் கருத்துக் கணிப்பில் இந்தியாவின் சிறந்த முதல்வர் பட்டியலில் முதலிடம் பிடித்து ஆச்சர்யப்படுத்தினார். இதையடுத்து அவர் சிறப்பாக ஆட்சி செய்வதாக வெளிமாநிலங்களில் இருப்பவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டி வருகிறார்கள்.

    நேற்று தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தமிழக முதல்வரை பாராட்டி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், இன்று தெலுங்கின் உச்ச நட்சத்திரம் சிரஞ்சீவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்திருக்கிறார்.



    இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் சிரஞ்சீவி, ”தமிழக முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. கட்சிகள் தாண்டி அவர் எடுத்திருக்கும் சில பயனுள்ள முயற்சிகள் மூலம் சிறந்த அரசியல் தலைவராக அவர் உயர்ந்திருப்பதற்கும், மக்களின் தலைவராக, தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்புடன், கொரோனா காலகட்டத்தில் சிறப்பான ஆட்சி தந்து வருவதற்காகவும் வாழ்த்துகள் கூறினேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

    இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் - நடிகர் சிரஞ்சீவி சந்திப்பு படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: