Home /News /entertainment /

சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் சின்னத்திரை தொகுப்பாளர் ரக்ஷன்… ஷூட்டிங் தொடக்கம்

சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் சின்னத்திரை தொகுப்பாளர் ரக்ஷன்… ஷூட்டிங் தொடக்கம்

படக்குழுவினருடன் ரக்ஷன்

படக்குழுவினருடன் ரக்ஷன்

Actor rakshan : ரக்ஷன் நாயகனாக நடிக்கும் அந்த திரைப்படத்தின் தலைப்பு, முதல் பார்வை, டீசர் உள்ளிட்டவற்றை பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன.

சின்னத்திரை தொகுப்பாளர் ரக்ஷன் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரக்ஷன், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்திருந்தார்.

ஆனால் அதற்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்காமல்,  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டும்  பங்கேற்று வந்தார். இந்த நிலையில் இரா.கோ.யோகேந்திரன் என்பவர் இயக்கும் படத்தில் ரக்ஷன் நாயகனாக அறிமுகமாகிறார்.  அதற்கானப் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

புதிய படத்திற்கு சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய நயன்தாரா… எவ்வளவு தெரியுமா?

அந்த திரைப்படத்தில் ரக்ஷன் உடன் கலக்கப்போவது யாரு தீனா, பிராங்க்ஸ்டர் ராகுல், உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  அதேபோல் நாயகியாக விஷாகா திமான் என்ற அறிமுக நடிகை நாயகியாக நடிக்க உள்ளார்.

ரக்ஷன் நாயகனாக நடிக்கும் அந்த திரைப்படத்தின் தலைப்பு, முதல் பார்வை, டீசர் உள்ளிட்டவற்றை பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன.



காதல், நட்பு, குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி பகுதிகளில் நடைபெறுகிறது.

லலித் மோடியுடன் திருமணமா? நடிகை சுஷ்மிதா சென் விளக்கம்…

சிவகார்த்திகேயன் சந்தானத்தை தொடர்ந்து தொலைக்காட்சியில் இருந்து நாயகனாகவும் தொகுப்பாளர் ரக்ஷன்.
Published by:Musthak
First published:

Tags: Kollywood

அடுத்த செய்தி