Home /News /entertainment /

திருமணத்துக்கு மறுத்த சீரியல் நடிகையை கத்தியால் குத்திய தயாரிப்பாளர்..

திருமணத்துக்கு மறுத்த சீரியல் நடிகையை கத்தியால் குத்திய தயாரிப்பாளர்..

நடிகை மால்வி மல்ஹோத்ரா

நடிகை மால்வி மல்ஹோத்ரா

திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த சின்னத்திரை நடிகையை, தயாரிப்பாளர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த மால்வி மல்ஹோத்ரா சீரியல்கள் மற்றும் விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 26-ஆம் தேதி இரவு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது யோகேஷ் மஹிபால் சிங் என்பவர் வழிமறித்துள்ளார்.

தன்னை ஒரு தயாரிப்பாளர் என்று கூறிக் கொண்ட மஹிபால் சிங் திருமணம் செய்துகொள்ளுமாறு மால்வியிடம் கூறியுள்ளார். அதற்கு மால்வி மறுப்பு தெரிவிக்கவே தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நடிகையின் வயிற்றிலும், கைகளிலும் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார் யோகேஷ். இதையடுத்து படுகாயம் அடைந்த நடிகை மால்வி மல்ஹோத்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.



நடிகை மால்வி தாக்கப்பட்டது குறித்து ட்வீட் செய்திருக்கும் நடிகை கங்கணா ரனாவத், இச்சம்பவத்தில் குற்றம் செய்தவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும், நடிகை மால்வியுடன் நான் இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடிய யோகேஷ் மஹிபால் சிங்கை தேடி வருகின்றனர்.
Published by:Sheik Hanifah
First published:

Tags: Bollywood

அடுத்த செய்தி