தெலங்கானா கனமழை பாதிப்பு.. நிவாரண நிதி அளித்த நடிகர்கள் சிரஞ்சீவி, மகேஷ் பாபு, விஜய் தேவரகொண்டா..
தெலங்கானா கனமழை பாதிப்பு.. நிவாரண நிதி அளித்த நடிகர்கள் சிரஞ்சீவி, மகேஷ் பாபு, விஜய் தேவரகொண்டா..
தெலங்கானா நிதி வழங்கிய நடிகர்கள்
தெலுங்கானாவுக்கு நடிகர் சிரஞ்சீவி ரூ.1 கோடியை தெலுங்கானா முதலமைச்சர் நிவாரணத்திற்கு நிதியுதவி வழங்கியுள்ளார். நடிகர் மகேஷ் பாபு ரூ.1 கோடியும், ஜூனியர் என்.டி.ஆர். ரூபாய் 50 லட்சமும், விஜய் தேவரகொண்டா ரூபாய் 10 லட்சமும் நிவாரண நிதியுதவியாக வழங்கி இருக்கிறார்கள்.
தெலுங்கானாவில் கொட்டித்தீர்த்த கனமழை, வெள்ளம் காரணமாக 5000 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்தார்.
பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்காக உடனடியாக ரூ 1,350 கோடி வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். கனமழை, வெள்ளம், வெள்ளம் காரணமாக ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக தெலங்கானாவில் மட்டும் 70 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் மாநில அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள தெலுங்கானாவுக்கு நடிகர் சிரஞ்சீவி ரூ.1 கோடியை தெலுங்கானா முதலமைச்சர் நிவாரணத்திற்கு நிதியுதவி வழங்கியுள்ளார். நடிகர் மகேஷ் பாபு ரூ.1 கோடியும், ஜூனியர் என்.டி.ஆர். ரூபாய் 50 லட்சமும், விஜய் தேவரகொண்டா ரூபாய் 10 லட்சமும் நிவாரண நிதியுதவியாக வழங்கி இருக்கிறார்கள். மேலும் பலர் நிதியுதவி வழங்க வேண்டும் என்று நடிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Published by:Gunavathy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.