’என் தாய் ஈழத்தைச் சேர்ந்தவர்.. போர்க்காட்சிகள் ‘800’ படக்கதையில் உள்ளன‘ - இளவயது முத்தையா முரளிதரனாக நடிக்க மறுத்த ‘அசுரன்’ நடிகர்..

‘அசுரன்’ பட நடிகர் டீஜே அருணாச்சலம் ‘800’ பட வாய்ப்பை மறுத்திருக்கிறார்.

’என் தாய் ஈழத்தைச் சேர்ந்தவர்.. போர்க்காட்சிகள் ‘800’ படக்கதையில் உள்ளன‘ - இளவயது முத்தையா முரளிதரனாக நடிக்க மறுத்த ‘அசுரன்’ நடிகர்..
நடிகர் டீஜே
  • Share this:
இலங்கையின் முன்னணி கிரிக்கெட் வீரராக அறியப்படுபவர் முத்தையா முரளிதரன். 133 டெஸ்டுகள், 350 ஒன் டே மேட்ச், 12 டி20 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். தற்போது அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கும் இந்தப் படத்தில் முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிப்பதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அரசியல்வாதிகள், திரையுலகினர் உள்ளிட்டோர் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளனர். அதேபோல் ட்விட்டர் பக்கத்தில் #ShameonVijaySethupathi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது.

இந்த விவகாரம் பேசு பொருளானதை அடுத்து ‘800’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வாயிலாக விளக்கமளித்தது. அதில், “'800' திரைப்படம்‌ முழுக்க ஒரு கிரிக்கெட்‌ வீரரின்‌ வாழ்க்கை சம்பந்தப்பட்ட படமே தவிர இதில்‌ எந்த வித அரசியலும்‌ கிடையாது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் ‘800’ படத்தின் கதையில் இளம் வயது முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்ததாக நடிகர் டீஜே அருணாச்சலம் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “‘800’ படத்தின் கதையின் சில பகுதிகளை இயக்குநர் என்னிடம் சொன்னார். தமிழர்களுக்கும் இலங்கை அரசுக்குமான போர் தொடர்பான காட்சிகள் அதில் உள்ளன. எனக்கு அது சரியாகப்படவில்லை. என் தாய் ஈழத்தைச் சேர்ந்தவர். போரில் நிறைய கொடுமைகள் நடந்திருக்கின்றன. கதையில் உள்ள அரசியலில் என்னை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பவில்லை. எனவே நடிக்க மறுத்துவிட்டேன்” இவ்வாறு டீஜே தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: முதல்வர் பழனிசாமியின் தாயார் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய திரைப்பிரபலங்கள்மேலும் தனது பேட்டியை பேஸ்புக்கில் பதிவிட்டிருக்கும் டீஜே அருணாச்சலம், “என் முடிவில் உறுதியாக இருக்கிறேன். அனைவரது ஆதரவுக்கும் நன்றி. என் தாய்மொழியில் இருந்துதான் இந்த உலகுக்கு வந்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
First published: October 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading