ரஜினி, கமல், விஜய்யுடன் ஒரே நேரத்தில் தீயாய் வேலை செய்யும் பிரபலம்!

ரஜினி, கமல், விஜய்யுடன் ஒரே நேரத்தில் தீயாய் வேலை செய்யும் பிரபலம்!
விஜய்-கமல்-ரஜினி
  • News18
  • Last Updated: August 27, 2019, 1:49 PM IST
  • Share this:
ரஜினியின் தர்பார், கமலின் இந்தியன் 2, விஜய்யின் தளபதி 64 ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத்.

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து அசத்தி வருகிறார் அனிருத். இன்றைய தலைமுறையினரை கவரும் இசையமைப்பாளர்களில் மிக முக்கியமான ஒருவராக திகழ்பவர் அனிருத். அவருடைய இசையில் வெளியாகும் பாடல்கள், படத்தின் தீம் மியூசிக், பின்னணி இசை என அனைத்தும் டாப் கிளாஸ் ரகங்கள்.

இந்த வருடம் அவருக்கு மிக முக்கியமான வருடங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த வருடத்தில் ரஜினி, கமல், விஜய் என தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்திற்காக இசையமைத்திருந்தார் அனிருத். தற்போது தர்பார் படத்திற்காக 2-வது முறையாக ரஜினியுடன் கூட்டணி அமைத்துள்ளார். இதைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்திற்காக உலகநாயகன் கமல்ஹாசனுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்துள்ளார்.

அடுத்தடுத்து ரஜினி, கமல் படங்களுக்கு இசையமைத்து அசத்தி வரும் அனிருத் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் தளபதி 64 படத்தில் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். கத்தி படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் உடன் கைகோர்த்துள்ளார் அனிருத்.

2014-ம் ஆண்டு வெளியான கத்தி படத்தில் இடம்பெற்ற பாடல்களும் அனைத்து ஹிட் அடித்தன. அதுமட்டுமல்லாமல் கத்தி படத்தின் தீம் மியூசிக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த கூட்டணி மீண்டும் அமைந்துள்ளாதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.இதன்மூலம் தமிழ் சினிமாவில் முக்கியமான இசையமைப்பாளராக உருவாகியுள்ளார் அனிரூத்

விஜய்க்கு வில்லனாகும் விஜய் சேதுபதி... மாஸ் காட்டும் ‘தளபதி 64’

Also watch

First published: August 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading