ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கிராமத்தான குணமா தான பாத்துருக்க... கோவப்பட்டு பாத்தது இல்லையே... வெளியானது அண்ணாத்த டீசர்!

கிராமத்தான குணமா தான பாத்துருக்க... கோவப்பட்டு பாத்தது இல்லையே... வெளியானது அண்ணாத்த டீசர்!

கிராமத்தான குணமா தான பாத்துருக்க... கோவப்பட்டு பாத்தது இல்லையே... வெளியானது அண்ணாத்த டீசர்!

Annaatthe Teaser: ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளி அன்று வெளியாக உள்ள அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் வெளியானது

  • News18
  • 1 minute read
  • Last Updated :

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள 'அண்ணாத்த' படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் சிவா இயக்கத்திலல், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். அந்த வகையில் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பல படங்களில் பின்னணி பாடியுள்ள எஸ்.பி. பி, கடைசியாக 'அண்ணாத்த' படத்தில் பாடிய அறிமுக பாடலான 'அண்ணாத்த அண்ணாத்த' பாடல் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது பாடலான 'சார காற்றே' பாடல் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Also read... யுத்த காண்டம் - இந்தியாவின் முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம்!

' isDesktop="true" id="585557" youtubeid="EqOSFhIKbRg" category="cinema">

இந்நிலையில் இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாத்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதில் ரஜினி, கிராமத்தான குணமா தான பாத்துருக்க... கோவப்பட்டு பாத்தது இல்லையே, காட்டாறு, அவனுக்கு கரையும் கிடையாது தடையும் கிடையாது போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளது.

First published:

Tags: Annaatthe, Rajinikanth