• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • டெல்லியில் விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பு...!

டெல்லியில் விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பு...!

பீஸ்ட்

பீஸ்ட்

2022 பொங்கலுக்கு பீஸ்டை வெளியிட சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்புக்காக பீஸ்ட் படக்குழு டெல்லி செல்கிறது. 

பிகிலுக்குப் பிறகு விஜய் நடித்துவரும் ஆக்ஷன் திரைப்படம் பீஸ்ட். ஜார்ஜியாவில் இதன் முதல்கட்டப் படப்பிடிப்பை நடத்தினார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கியவர் இவர். சன் பிக்சர்ஸ் பீஸ்டை தயாரிக்கிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜார்ஜியா படப்பிடிப்பு முடிந்த பின் சென்னையில், ஷாப்பிங் மால் அரங்கம் அமைத்து அதில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தினர். பிறகு சென்னை புறநகரில் மூன்றாம்கட்ட படப்பிடிப்பை தொடங்கி, தொடர்ந்து நடத்தி வருகின்றனர்

Also read... இது யார் தெரியுமா? - இயக்குனர் வர்மா வெளியிட்ட காதல் ரகசியம்!

பீஸ்டின் நான்காம்கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் டெல்லியில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். மொத்தம் ஐந்து தினங்கள் அங்கு படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். முக்கியமான காட்சிகள் அனைத்தும் அடுத்த மாத இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என்கின்றன உள்வட்ட தகவல்கள்2022 பொங்கலுக்கு பீஸ்டை வெளியிட சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: