Home /News /entertainment /

திரைப்படங்களுக்கான தொலைக்காட்சி, டிஜிட்டல் உரிமைகளுக்கான டிடிஎஸ் குறைப்பு

திரைப்படங்களுக்கான தொலைக்காட்சி, டிஜிட்டல் உரிமைகளுக்கான டிடிஎஸ் குறைப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திரைப் படங்களின் தொலைக்காட்சி உரிமம், டிஜிட்டல் உரிமம் ஆகியவற்றில் வியாபாரத்தில் 2% TDS செலுத்தினால் போதும். 

  • News18
  • Last Updated :
    தமிழ் திரைப்படங்களுக்கான தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமைகளுக்கான TDS  10 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

    திரைப்படங்களுக்கு திரை வெளியீட்டை தவிர, பல வியாபாரங்கள் பெருகியுள்ளன./ குறிப்பாக தொலைக்காட்சி உரிமம், டிஜிட்டல் உரிமம் உள்ளிட்டவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

    இந்த இரண்டு வியாபாரத்திற்கும் இதுவரை 10 சதவீத TDS தொகை வசூல் செய்யப்பட்டு வந்தது.  குறிப்பாக ஒரு கோடி ரூபாய்க்கு தொலைக்காட்சி உரிமம் விற்கப்பட்டால், அதற்கு தயாரிப்பாளர் 10 லட்ச ரூபாய் TDS செலுத்தவேண்டிய கட்டாயம்.

    இதை குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தினர் இதுகுறித்த கோரிக்கையை மத்திய அரசுக்கு வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் தற்போது தொலைக்காட்சி உரிமம் மற்றும் டிஜிட்டல் உரிமம் ஆகியவற்றிற்கு 2 சதவீத TDS செலுத்தினால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது சம்பந்தமாக நேற்று TDS அலுவலகம் சார்பில் நடப்பு தயாரிப்பாளர் சங்கத்திற்கும், நடிகர் சங்கத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி தயாரிப்பாளர் டி.சிவா மற்றும் நாசர் ஆகியோர் டிடிஎஸ் அதிகாரியுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

    Also read... நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தை ஆகஸ்டில் வெளியிட முயற்சி

    இதுகுறித்து தயாரிப்பாளர் டி.சிவா ஆடியோ வெளியிட்டுள்ளார்.  அதில் தொலைக்காட்சி உரிமம், டிஜிட்டல் உரிமம் ஆகியவற்றுக்கு 2% டிடிஎஸ் கட்டினால் போதுமானது என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

    மேலும் டிடிஎஸ் அதிகாரிகள் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு இந்த வழிமுறை குறித்து விளக்க கூட்டம் ஒன்று நடத்தவும் திட்டமிட்டிருக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Producer Council

    அடுத்த செய்தி