ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விமான விபத்தில் சிக்கிய ‘டார்சன்’ நடிகர் - மனைவியுடன் பலியான சோகம்

விமான விபத்தில் சிக்கிய ‘டார்சன்’ நடிகர் - மனைவியுடன் பலியான சோகம்

 ஜோ லாரா

ஜோ லாரா

2002-ம் ஆண்டுடன் நடிப்பு தொழிலை விட்டுவிட்டு இசை மீது தனது ஆர்வத்தை காட்டினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  அமெரிக்காவின் டென்னசி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது. விமான நிலையத்தில் இருந்து 12 மைல் தொலைவில் உள்ள பெர்சி பிரைஸ்ட் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 7பேரும் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த விபத்தின் டார்சன் புகழ் நடிகர் ஜோ லாரா மற்றும் அவரது மனைவி க்வென் ஷாம்ப்ளின் லாரா இருவரும் உயிரிழந்தனர்.

  அமெரிக்காவில் 1989-ம் ஆண்டு வெளியான பிரபல தொலைக்காட்சி திரைப்படமான‘டார்சன் இன் மன்ஹாட்டனில்’ ஜோ லாரா டார்சன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் லாராவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதனையடுத்து 1996 - 1997 -ம் ஆண்டுகளில் "டார்சன்: தி எபிக் அட்வெஞ்சர்ஸ்" என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார். அதுமட்டுமல்லாமல் பல ஆக்‌ஷன் படங்களிலும் லாரா நடித்துள்ளார். லாராவுக்கு தற்காப்பு கலையும் தெரியும். 2002-ம் ஆண்டுடன் நடிப்பு தொழிலை விட்டுவிட்டு இசை மீது தனது ஆர்வத்தை காட்டினார்.

  இந்நிலையில் 2018-ம் ஆண்டு க்வென் ஷாம்ப்ளினை கரம் பிடித்தார். க்வென் ஷாம்ப்ளின் 1999ல் டென்னசியின் பிரென்ட்வுட்டில் ஒரு தேவாலயத்தை நிறுவி அதனை நிர்வகித்து வந்தார். கணவன்-மனைவி இருவரும் தேவாலயத்தை நிர்வகித்து வந்த நிலையில் இருவரும் விமான விபத்தில் இறந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: America, Death, Died, Plane crash, Television Program