நயன்தாரா விவகாரம்; ராதாரவியை கிழித்து தொங்கவிட்ட டாப்ஸி!

நயன்தாரா குறித்து பொதுமேடையில் ராதாரவி பேசிய அவதூறு பேச்சுக்கு, நயன்தாராவின் காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் ட்விட்டரில் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

news18
Updated: March 25, 2019, 9:21 AM IST
நயன்தாரா விவகாரம்; ராதாரவியை கிழித்து தொங்கவிட்ட டாப்ஸி!
நயன்தாரா
news18
Updated: March 25, 2019, 9:21 AM IST
ராதாரவி என்ன நடிகைகளின் குணங்களுக்குச் சான்று கொடுக்கும் அமைப்பின் தலைவராக உள்ளாரா? என நயன்தாரா குறித்து அவதூறாகப் பேசிய நடிகர் ராதாரவியை ட்விட்டரில் கிழித்து தொங்கவிட்டுள்ளார் டாப்ஸி.

ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி பாலிவுட்டில், பிங்க், பாட்லா படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை டாப்ஸி, கொலையுதிர் காலம் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், நடிகை நயன்தாரா குறித்து அவதூறு கருத்து தெவித்துள்ள நடிகர் ராதரவி என்ன நடிகைகளின் குணங்களுக்குச் சான்று கொடுக்கும் அமைப்பின் தலைவராக உள்ளாரா? எனக் கேள்வி ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவுக்கே இப்படி ஒரு நிலைமை என்றால், மற்ற நடிகைகள் குறித்து எவ்வளவு கீழ்த்தரமாக ராதாரவி பேசுவார் என எண்ணிப்பார்க்கிறேன் என்றார்.

Loading...
கொலையுதிர்காலம் ட்ரெய்லரில், முன்னெல்லாம், சாமியாக நடிக்க கே.ஆர். விஜயா போல கையெடுத்து கும்பிடும் முகங்களை படங்களில் நடிக்க வைப்பார்கள். இப்போது, கைதட்டி கூப்பிடத் தோன்றும் நடிகைகளை சாமியாக நடிக்க வைக்கிறார்கள் என்றும் சீதாவாகவும் நயன்தாரா நடிக்கிறார், பேயாகவும் நடிக்கிறார் என விமர்சித்தார்.

நயன்தாரா குறித்து பொதுமேடையில் ராதாரவி பேசிய அவதூறு பேச்சுக்கு, நயன்தாராவின் காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் ட்விட்டரில் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். அவருக்கு ஆதரவாக சினிமா பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

Also See..

First published: March 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...