ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

டாணாக்காரன் வெற்றியை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பு….

டாணாக்காரன் வெற்றியை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பு….

டாணாக்காரன் படத்தில் விக்ரம் பிரபு

டாணாக்காரன் படத்தில் விக்ரம் பிரபு

கதைத் தேர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விக்ரம் பிரபு நடிப்பதால் ஆண்டுக்கு அதிகபட்சமாக 2 படங்கள் மட்டுமே அவரது நடிப்பில் வெளி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

டாணாக்காரன் வெற்றியை தொடர்ந்து நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த படத்துடைய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

நடிகர் பிரபுவின் மகனும் வளர்ந்து வரும் நடிகருமான விக்ரம் பிரபு கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். அந்த ஆண்டு வெளியான அவரது முதல்படமான கும்கி மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது.

இதன் பின்னர் இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு படங்கள் ஓரளவு வரவேற்பை பெற்றன. இந்நிலையில், சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளிவந்த டாணாக்காரன் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க - தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் தனுஷின் கேரக்டர் போஸ்டர் வெளியீடு…

கதைத் தேர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விக்ரம் பிரபு நடிப்பதால் ஆண்டுக்கு அதிகபட்சமாக 2 படங்கள் மட்டுமே அவரது நடிப்பில் வெளி வருகிறது.

நீண்டகால திரையுலக போராட்டத்திற்கு பின்னர் அவரது டாணாக்காரன் திரைப்படம் மிகப்பெரும் பாராட்டை பெற்றுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து காவல்துறையில் காவலர்கள் நலனுக்காக புதிய உத்தரவுகள் தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ‘இரத்தமும் சதையும்’ என்று பெயர் வைத்துள்ளனர்.

எனக்கு வாய்ப்பு தர என் அம்மாவை அட்ஜஸ்ட் செய்ய சொன்னார்கள் - பகீர் கிளப்பிய செந்தூரப்பூவே ஸ்ரீநிதி

படத்தை அறிமுக இயக்குனரான ஹரேந்தர் பாலச்சந்தர் இயக்கவுள்ளார். படத்தில் இடம்பெறும் மற்ற தொழில் நுட்ப கலைஞர்களின் விபரங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

இரத்தமும் சதையும் படத்தின் அறிவிப்பை பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

First published:

Tags: Vikram Prabhu