ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நயன்தாரா வாடகைத்தாய் விவகாரத்தில் சிக்கும் மருத்துவமனை! விதி மீறியதால் தமிழக அரசு நடவடிக்கை

நயன்தாரா வாடகைத்தாய் விவகாரத்தில் சிக்கும் மருத்துவமனை! விதி மீறியதால் தமிழக அரசு நடவடிக்கை

நயன் - விக்கி

நயன் - விக்கி

ஆவணங்கள் சரியான வகையில் மருத்துவமனையில் பராமரிக்கப்படாததால் ஏன் தற்காலிகமாக மூடக்கூடாது என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றது. இதற்கு பிறகு இருவரும் தங்களுடைய படங்களில் பிஸியாக இருந்தனர்.

    இந்த நிலையில் வாடகை தாய் மூலமாக இந்த நட்சத்திர ஜோடிக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது. கடந்த 9-ம் தேதி அந்த குழந்தைகளுடன் இருக்கு புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூகவலைதளப் பகுதிகளில் குழந்தைகள் பிறந்ததை அறிவித்தார்.

    வாடகை தாய் விவகாரம்: நயன்தாரா விதி மீறவில்லை - தமிழ்நாடு அரசு தகவல்

    இந்நிலையில் வாடகைதாய் குறித்து பல கேள்விகளும் சர்ச்சைகளும் தொடர்ந்து வந்துக்கொண்டிருந்தது. வாடகை தாய் விவகாரம் குறித்து விசாரிக்க சுகாதார இணை இயக்குநர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை சமீபத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன் அமைத்தார்.

    இந்த குழுவின் அறிக்கை இன்று வெளியாகியுள்ளது. அதில், செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் முறைக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக இரட்டைக்குழந்தை ஏற்பாடு செய்த மருத்துவமனை தற்போது சிக்கலில் மாட்டியுள்ளது. அரசின் அறிக்கையில் ''ICMR வழிகாட்டு முறைகளின் படி மருத்துவமனையில் தம்பதியருக்கு அளித்த சிகிச்சை குறித்த விபரங்கள் மற்றும் வாடகை தாயின் உடல்நிலை குறித்து ஆவணங்கள் முறையாக வைத்திருக்க வேண்டும் ஆனால் இது குறித்து ஆவணங்கள் சரியான வகையில் மருத்துவமனையில் பராமரிக்கப்படவில்லை எனவே மேற்கூறிய வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றாத தனியார் மருத்துவமனையின் செயற்கை கருத்தரித்தல் மையத்தை ஏன் தற்காலிகமாக மூடக்கூடாது என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது'' எனக் குறிப்பிட்டுள்ளது.


    Published by:Murugadoss C
    First published:

    Tags: Director vignesh shivan, Nayanthara