Home /News /entertainment /

பாரதிராஜாவின் இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்…

பாரதிராஜாவின் இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்…

பாரதிராஜாவிடம் நலம் விசாரிக்கும் ஸ்டாலின்.

பாரதிராஜாவிடம் நலம் விசாரிக்கும் ஸ்டாலின்.

தமிழில் சில படங்களில் பாரதி ராஜா நடித்து வருகிறார். தற்போது அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் சம்பந்தப்பட்ட படங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சிகிச்சை குணம் அடைந்து இயக்குனர் பாரதி ராஜா வீட்டிற்கு திரும்பிய நிலையில் அவரை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

    தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரான இயக்குனர் இமயம் பாரதி ராஜாவுக்கு சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வயது முதிர்வு மற்றும் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்ட அவர் சென்னை தனியார் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இதில் முன்னேற்றம் ஏற்பட்ட  நிலையில் நேற்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்திற்கு சென்று அவரிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

    விக்ரம் 100வது நாள்.. ரசிகர்களுக்கு ஆடியோ மூலம் சர்ப்ரைஸ் கொடுத்த கமல்ஹாசன்!

    இந்த சந்திப்பின்போது கவிப்பேரரசு வைரமுத்து, தமிழக அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பாரதிராஜாவுக்கு ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பு சரி செய்யப்பட்டு விட்டதாகவும் இனி பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.



    81 வயதாகும் பாரதி ராஜா இளைஞரைப் போன்று ஆடையணிந்து உற்சாகத்துடன் பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் அவருக்கு தாத்தாவாக நடித்து ரசிகர்களை ஈர்த்தார் பாரதி ராஜா.

    கணவர் வழியில் செல்லும் ஆல்யா மானசா.. சின்னத்திரையில் பரவும் அந்த விஷயம் உண்மையா?

    தமிழில் சில படங்களில் பாரதி ராஜா நடித்து வருகிறார்.  தற்போது அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் சம்பந்தப்பட்ட படங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Published by:Musthak
    First published:

    Tags: Bharathiraja, CM MK Stalin

    அடுத்த செய்தி