முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சமூக பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும் - தேசிய விருது வென்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சமூக பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும் - தேசிய விருது வென்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

National Film Awards : சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

  • 1-MIN READ
  • Last Updated :

சமூக பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும் என்று கூறி, தேசிய விருது வென்ற தமிழ் திரைக்கலைஞர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் தனது வாழ்த்துச் செய்தியில், ‘68வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் விருதுகளை குவித்து தமிழ் திரையுலகுக்கு பெருமை சேர்த்துள்ள தம்பி சூர்யா, இயக்குனர் சுதா கொங்கரா, ஜி.வி. பிரகாஷ், அபர்ணாபாலமுரளி உள்ளிட்ட சூரரைப்போற்று படக்குழுவினருக்கும்,

இயக்குனர் வசந்த், லட்சுமி பிரியா சந்திர மவுலி, ஸ்ரீகர் பிரசாத் உள்ளிட்ட சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படக்குழுவினருக்கும்,

மடோன்னே அஷ்வின், யோகி பாபு உள்ளிட்ட மண்டேலா படக்குழுவினருக்கும் எனது பாராட்டுக்கள்.

அனைத்து விருதாளர்களுக்கும் வாழ்த்துக்கள். சமூக பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும்’ என்று கூறியுள்ளார்.

‘நாம ஜெயிச்சுட்டோம் மாறா!’ – தேசிய விருது அறிவிப்பை கொண்டாடிய சுதா கொங்கரா

சூரரைப் போற்று படத்திற்கு சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த பின்னணி இசை எனமொத்தம் 5 தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

இயக்குனர் வசந்த்தின் இயக்கத்தில் வெளிவந்த சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு சிறந்த தமிழ் படம், சிறந்த எடிட்டிங் மற்றும் சிறந்த துணை நடிகை என 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நீ எங்கிருந்தாலும் சந்தோசப்பட்டிருப்பாய்... ஐயப்பனும் கோஷியும் இயக்குநருக்குத் தேசிய விருது.. கலங்கிய பிரித்வி ராஜ்!

சிறந்த திரைக்கதை பிரிவில் வசனகர்த்தாவுக்கான தேசிய விருது மற்றும் அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி தேசிய விருது ஆகியவை யோகி பாபு நடித்த மண்டேலா பட இயக்குனர் மடோன்னே அஷ்வினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: National Film Awards