• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பல இன்னல்களுக்கிடையே வெளியான மாநாடு... முதல் நாளே ஆன்லைனில் லீக் - அதிர்ச்சியில் படக்குழு

பல இன்னல்களுக்கிடையே வெளியான மாநாடு... முதல் நாளே ஆன்லைனில் லீக் - அதிர்ச்சியில் படக்குழு

சிம்பு - மாநாடு

சிம்பு - மாநாடு

பிரச்னைகள் சரி செய்யப்பட்டு ஒருவழியாக இன்று காலை திரையரங்குகளில் வெளியானது சிம்புவின் மாநாடு திரைப்படம்.

  • Share this:
    பல சிரமங்களுக்கிடையே வெளியான சிம்புவின் மாநாடு திரைப்படம் முதல் நாளிலேயே ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.

    சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞனாக நடிக்க, யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

    படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படமும் அதே தினத்தில் வெளியாக தயாரானது. இதையடுத்து மாநாடு திரைப்படம் நவம்பர் 25-ம் தேதி வெளியாகும் என அறிவித்தனர் படக்குழு.

    இந்நிலையில் நேற்று மாலை ‘மாநாடு’ திரைப்படம் நாளை வெளியாகாது எனவும், வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் தெரிவித்தார். இதைப் பார்த்த சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

    பின்னர் பிரச்னைகள் சரி செய்யப்பட்டு ஒருவழியாக இன்று காலை மாநாடு திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இது படக்குழுவினருக்கும், ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், அவர்களை சோகத்தில் ஆழ்த்தும் விதமாக இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது.

    Tamilblasters leaks Simbu Maanaadu online, tamil blasters, tamilblasters maanaadu, maanaadu in tamilblasters , tamilrockers maanaadu, maanaadu tamilrockers, maanaadu tamilrockers isaimini, maanaadu online, maanaadu download, maanadu movie download kuttymovies, maanaadu movie download tamilyogi, maanaadu movie download tamilrockers, maanaadu download masstamilan, maanaadu full movie download, maanaadu download isaimini, maanaadu tamilyogi, maanaadu full movie online, மாநாடு ஆன்லைன் லீக், மாநாடு திரைப்படம், தமிழ் ராக்கர்ஸ் மாநாடு, ஆன்லைனில் மாநாடு, சிம்பு மாநாடு, மாநாடு டவுன்லோடு
    ஆன்லைனில் மாநாடு


    ஆம்! மாநாடு திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே தமிழ் பிளாஸ்டர்ஸ் (முன்பு தமிழ் ராக்கர்ஸ்) இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளது. பல தடைகளை தாண்டி வெளியான மாநாடு திரைப்படம் இப்படி ஆன்லைனில் வெளியானது படக்குழுவினர் மத்தியிலும், சிம்பு ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: