தமிழ்ராக்கர்ஸில் வெளியான பேட்ட - படக்குழு அதிர்ச்சி

பேட்ட படத்தை சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

Web Desk | news18
Updated: January 10, 2019, 6:23 PM IST
தமிழ்ராக்கர்ஸில் வெளியான பேட்ட - படக்குழு அதிர்ச்சி
பேட்ட - ரஜினிகாந்த்
Web Desk | news18
Updated: January 10, 2019, 6:23 PM IST
பேட்ட படத்தை சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் - ரஜினி கூட்டணியில் உருவாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்தக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இன்று வெளியாகியிருக்கும் இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டனாக நடித்துள்ளார். “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” என்ற வசனத்தில் தொடங்கும் பேட்ட படத்தில் “ஒரு நல்லாட்சி எப்படி இருக்குமோ அப்படி தான் இனிமே இந்த ஹாஸ்டல் இருக்கும். புதுசா வருபவர்களை தொறத்துற அரசியல் இங்கு இருந்து தான் தொடங்குது. நான் நல்லவன் தான். ரொம்ப நல்லவன் கிடையாது. ” என்ற அரசியல் வசனங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் படம் வெளியான முதல் நாளன்றே படத்தை தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் சட்டவிரோதமாக வெளியிட்டுள்ளது.
முன்னதாக பேட்ட படத்தை இணையதளம் மற்றும் கேபிள்களில் வெளியிட தடைக்கோரி சன் நெட்வொர்க் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர் இந்த படத்தை இணைதளம் மற்றும் கேபிள்களில் சட்ட விரோதமாக வெளியிட தடை விதித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.VIDEO: மாலை போடும் போது சரிந்து விழுந்த விஸ்வாசம் பேனர் - 6 பேர் காயம்
Loading...
First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...