Home /News /entertainment /

தமிழ் ராக்கர்ஸ் முடக்கப்படுவதாக அந்த இணையதளமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் ராக்கர்ஸ் முடக்கப்படுவதாக அந்த இணையதளமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு


தமிழ் ராக்கர்ஸ் இணையதளதம்

தமிழ் ராக்கர்ஸ் இணையதளதம்

Tamil Rockers தமிழ் சினிமாவில் ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு மேலாக இந்த இணையதளத்தை முடக்க பலவகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது அந்நிறுவனமே இணையதளத்தை முடக்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களை உடனடியாக இணையதளத்தில் வெளியிட்டு திரைத் துறைக்கு பெரும் சேதாரங்களை ஏற்படுத்தி வந்த தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முடக்கப்படுவதாக அந்த இணைய தளமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    எதன் காரணமாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முடங்கியது என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. தமிழ் சினிமாவில் ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு மேலாக இந்த இணையதளத்தை முடக்க பலவகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது அந்நிறுவனமே இணையதளத்தை முடக்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.



    தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலின்போது நடிகர் விஷால் இந்த வலைதளத்தை முடக்குவோம் என்று வாக்குறுதி அளித்து அதன் காரணமாகவே தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்.



     

    பதவிக்காலம் முழுவதும் இந்த இணையதளத்தின் சேவையை முடக்க முயற்சிகள் மேற்கொண்டும் நடிகர் விஷால் அந்த முயற்சிகளில் தோல்வியுற்ற நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இயக்குனர் மிஷ்கின் என பலரும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை நெருங்கி விட்டதாகவும் விரைவில் அவர்களை கைது செய்வோம் எனவும் மேடைகளில் பலமுறை முழங்கி உள்ளனர்.















    ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Tamil rockers

    அடுத்த செய்தி