ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தெலுங்கில் 'வாரிசு' பட சிக்கல்.. நாளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம்!

தெலுங்கில் 'வாரிசு' பட சிக்கல்.. நாளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம்!

வாரிசு

வாரிசு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் செயற்குழு நாளை தேதிக்கு மாற்றம். சங்கத்தின் தேர்தல், தெலுங்கில் வாரிசு படத்திருக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் உள்ளிட்ட விஷயங்களைக் குறித்து விவாதிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நாளைக்கு மாற்றப்பட்டுள்ளது.

தேனாண்டாள் முரளி தலைமையில் இயங்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறவிருந்தது.  அதில் சங்கத்தின் தேர்தலை நடத்துவது,  தெலுங்கு திரையுலகில் வாரிசு படத்துக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பேச திட்டமிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு நாளை தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.  தயாரிப்பாளர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைவதால்,  சங்கத்திற்கு தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

டிஜிட்டலில் மெருகேற்றப்பட்டு வெளியாகவிருக்கும் கமல், ரஜினி படங்கள்!

WATCH – ’குக் வித் கோமாளி’ சுனிதாவின் அசாம் வீடு!

குறிப்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தேர்தலை நடத்தவும் ஆலோசித்து வருகின்றனர். அதேசமயம் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்திற்கு தெலுங்கு திரையுலகில் ஏற்பட்டிருக்கும் சிக்கல் குறித்தும் விவாதிக்க உள்ளனர்.

Published by:Srilekha A
First published:

Tags: Kollywood, Tamil Cinema