100 நாட்கள் கடந்துவிட்டன: எப்போது மீண்டும் திரையரங்குகள் திறக்கப்படும்?

ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டதால் உரிமையாளர்கள், ஊழியர்கள் என பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

100 நாட்கள் கடந்துவிட்டன: எப்போது மீண்டும் திரையரங்குகள் திறக்கப்படும்?
திரையரங்கு
  • Share this:
தீபாவளி, பொங்கல் என எந்த பண்டிகை வந்தாலும் நம் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது திரையரங்குகள்தான். வார விடுமுறையை திரையரங்கில் சென்று கழித்தால்தான் இங்கு பலருக்கு விடுமுறையை கழித்த திருப்தியே வரும்... நம் அபிமான நட்சத்திரங்களின் படங்களை திரையரங்கில் காணும்போது ரசிகர்கள் எழுப்பும் விசில் சத்தமும், கரவொலியும் நம்மை குதூகலிக்க செய்யும்.

ஆனால் இந்த கொண்டாட்டங்கள் அனைத்தும் கொரோனா எனும் ஒற்றை சொல்லால் அடங்கி போயுள்ளது. ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டு 100 நாட்களை எட்டி விட்டது. விண்ணை பிளக்க செய்த விசில் சத்தங்கள் இப்போது இல்லை. தன்னை மறந்து மனிதர்கள் எழுப்பிய சிரிப்பலைகள் ஓய்ந்து போனது. கட் அவுட்களாலும், கூக்குரல்களாலும் மூச்சிரைத்த திரையரங்குகளில் இப்போது மயான அமைதி நிலவுகிறது.

ரசிகர்களின் ஆரவாரத்தால் நிறைந்துகிடந்த இருக்கைகள், எலிகளுக்கு இரையாகி போய்விடக்கூடாது என்பதற்காக நெருக்கடியான காலத்திலும் திரையரங்கு உரிமையாளர்கள் நாள்தோறும் பராமரிப்பு பணிகளை செய்து வருகின்றனர்.


வருமானம் சுத்தமாக நின்றுபோன நிலையில், பராமரிப்பு மற்றும் சம்பளத்திற்காக மாதந்தோறும் பெரும்தொகையை செலவிடுவதாக திரையரங்கு நிர்வாகிகள் கூறுகின்றனர்.

கையில் இருக்கும் பணத்தை வைத்து கடந்த மூன்று மாதங்களாக சமாளித்து வருவதாக கூறும் திரையரங்கு உரிமையாளர்கள், இதே நிலை தொடர்ந்தால் திரையரங்குகளை நிரந்தரமாக மூடும் நிலை ஏற்படும் என வேதனையோடு கூறுகின்றனர்.

மேலும் படிக்க: ரஜினி, அஜித்தைத் தொடர்ந்து, அதிரடி முடிவெடுத்த நடிகர் சூர்யா...சமூக இடைவெளி, உடல் வெப்ப பரிசோதனை என அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற தயாராக இருப்பதாகவும், திரையரங்குகளை திறந்தால் மட்டுமே தங்கள் வாழ்வாதாரத்திற்கு வழி பிறக்கும் என்றும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

யார் படம்... எத்தனை நாட்கள்... என போட்டி போட்டு படங்களை ஓட்டிய திரையரங்குகள் இன்றைக்கு எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பதை தெரியாத கேள்விக்குள் அகப்பட்டுள்ளது,
First published: June 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading