Home /News /entertainment /

காயத்ரி ரகுராமுக்கு தமிழக அரசு விருது!

காயத்ரி ரகுராமுக்கு தமிழக அரசு விருது!

முதல்வருடன் காயத்ரி ரகுராம்

முதல்வருடன் காயத்ரி ரகுராம்

பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக இருக்கும் காயத்ரி ரகுராம் பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நடிகை காயத்ரி ரகுராமுக்கு தமிழக அரசின் சிறந்த நடனக் கலைஞருக்கான விருது  அறிவிக்கப்பட்டுள்ளது. 

    கடந்த 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரை வெளியான சிறந்த படங்கள், சிறந்த நடிகர் - நடிகைகள், பின்னணி பாடகர்கள், பாடலாசிரியர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருக்கு தற்போது தமிழக அரசின் மாநில விருதுகள் வழங்கும் விழா குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் 2014-ம் ஆண்டுக்கான சிறந்த நடனக் கலைஞர் விருது நடிகையும், நடனக் கலைஞருமான காயத்ரி ரகுராமிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் படத்தில் சிறந்த நடனத்தை அமைத்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

    விவாகரத்து, சக நடிகருடன் நெருக்கம், தயாரிப்பாளருடன் இரண்டாவது திருமணம் - சீரியல் நடிகை மகாலட்சுமி ஆல்பம்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக இருக்கும் காயத்ரி ரகுராம் பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். ஆளுங்கட்சியை இணையத்தில் தாக்கி பதிவிட்டு வருபவர். இந்த விருது அறிவிப்பு கடந்த 2017-ல் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் வெளியானது என்றாலும் தற்போதைய திமுக ஆட்சியில் தான் விருது வழங்கப்படுகிறது. ஆக, தான் கடுமையாக தாக்கி பேசும் ஆளுங்கட்சியிடம் இருந்து காயத்ரி ரகுராம் விருது பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Gayathri Raghuram, Tamil Nadu Film Awards

    அடுத்த செய்தி