Home /News /entertainment /

சீமான் நடித்த திரைப்படத்துக்கு தமிழக அரசு விருது!

சீமான் நடித்த திரைப்படத்துக்கு தமிழக அரசு விருது!

சீமான்

சீமான்

2009-ம் ஆண்டு வெளியான சிறந்த படங்களில் இரண்டாவது பரிசை மாயாண்டி குடும்பத்தார் திரைப்படம் பெறுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சீமான் நடித்த திரைப்படத்திற்கு தமிழக அரசின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரை வெளியான சிறந்த படங்கள், சிறந்த நடிகர் - நடிகைகள், பின்னணி பாடகர்கள், பாடலாசிரியர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருக்கு தற்போது தமிழக அரசின் மாநில விருதுகள் வழங்கும் விழா குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் - நடிகைகள், பின்னணி பாடகர்கள், நடனக் கலைஞர்கள், தொழில்நுட்பக் குழுவினர் உள்ளிட்ட பிரிவுகளில் விருது பெறுபவர்களின் விபரங்கள் கடந்த 2017-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது. பின்னர் பல்வேறு சூழல்களால் விருது வழங்கும் விழா நடத்தப்படவில்லை.

    இந்நிலையில் தற்போது 2009 - 2014 ஆம் ஆண்டில் விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கும் விழா வரும் 4-ம் தேதி மாலை 5.00 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறவிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    விவாகரத்து, சக நடிகருடன் நெருக்கம், தயாரிப்பாளருடன் இரண்டாவது திருமணம் - சீரியல் நடிகை மகாலட்சுமி ஆல்பம்!



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    உன்னால் வாழ்க்கை அழகானது... கணவரை புகழ்ந்த சீரியல் நடிகை மகாலட்சுமி

    இதில் 2009-ம் ஆண்டு வெளியான சிறந்த படங்களில் இரண்டாவது பரிசை மாயாண்டி குடும்பத்தார் திரைப்படம் பெறுகிறது. இயக்குநர் ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் தருண் கோபி, மணிவண்ணன், சீமான், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Seeman, Tamil Nadu Film Awards

    அடுத்த செய்தி