ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஆயிரம் கோடியை தாண்டி வசூலித்த தமிழக தியேட்டர்ஸ்! கல்லா கட்டிய 2022!

ஆயிரம் கோடியை தாண்டி வசூலித்த தமிழக தியேட்டர்ஸ்! கல்லா கட்டிய 2022!

12 படங்கள் மூலம் ₹1,012 கோடி வசூல்

12 படங்கள் மூலம் ₹1,012 கோடி வசூல்

தமிழகத்தில் இந்த ஆண்டு 12 திரைப்படங்கள் மூலம் மட்டுமே ஆயிரம் கோடி ரூபாய் வசூல். 

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான படங்கள் மூலம் தமிழக திரையரங்கு வசூல் சுமார் ஆயிரத்து 100 கோடி ரூபாயை எட்டியுள்ளது. அதில் ஐந்து திரைப்படங்கள் 100 கோடி ரூபாய் தாண்டி வசூலித்துள்ளன.

தமிழ் சினிமாவில் 2010 க்கு பிறகு வருடத்திற்கு 200 திரைப்படங்கள் வெளியாவது வழக்கமாகின. ஆனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட மூன்று ஆண்டுகளில் திரைப்படங்கள் வெளியாகும் எண்ணிக்கை குறைந்தது.

இதனால் தயாரிப்பாளர்கள்,  திரையரங்க உரிமையாளர்கள் என சினிமா துறை சார்ந்த அனைவரும் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.  அத்துடன் அரசு தங்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர்.  ஆனால் இவர்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை.

கொரோனா காலகட்டம் முடிவடைந்து தற்போது திரையரங்குகள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியுள்ளன.  குறிப்பாக,  கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தை விட, தற்போதைய சூழல் சினிமா துறையினருக்கு லாபகரமாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

2020, 2021 ஆகிய ஆண்டுகளில் வெளியாகாத படங்கள் இந்த ஆண்டில் வெளியாகின அதே போல் இந்த ஆண்டு பல வெற்றி படங்களை தமிழ் திரையுலகம் கொடுத்துள்ளது. அதற்கு தொடக்கப் புள்ளியாக அஜித்தின் வலிமை திரைப்படம் அமைந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இந்த திரைப்படத்திற்கு எதிர்மறை விமர்சனங்களே கிடைத்தன. இருந்தாலும் தமிழகத்தில் இந்த திரைப்படம் 105 கோடி ரூபாய் வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. அதேபோல் மார்ச் மாதம் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடித்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

Read More: கேஜிஎப் ப்ளான்.. மாஸ் ஓபனிங்.. தமிழகத்தில் ஸ்கெட்ச் போட்ட காந்தாரா டீம்!

அந்த திரைப்படம் ஒட்டுமொத்தமாக 75 கோடி வசூலித்தது. ஏப்ரல் மாதம் தமிழ் சினிமாவுக்கு முக்கியமானதாக அமைந்தது.

diwali 2022, diwali 2022 movies in tv, tamil movies for diwali 2022, beast sun tv, vikram vijay tv, don kalaignar tv, kgf2 zee tamil, deepavali 2022, tamil calendar deepavali 2022, diwali 2022 date delhi, 5 days of diwali 2022, diwali 2022 date in india calendar, dussehra diwali 2022, தீபாவளி படங்கள், பீஸ்ட் சன் டிவி, டான் கலைஞர் டிவி, விக்ரம் விஜய் டிவி, விஜய், கமல் ஹாசன், சிவகார்த்திகேயன், thalapathy vijay, kamal haasan, sivakarthikeyan

இந்த மாதத்தில் விஜய் நடித்த பீஸ்ட் மற்றும் யஷ் நடிப்பில் கே.ஜி.எஃப்-2 ஆகிய திரைப்படங்கள் வெளியாக்கின. அதில் விஜயின் பீஸ்ட் திரைப்படம் 110 கோடியும் கே.ஜி.எஃப்-2 திரைப்படம் 115 கோடியும் தமிழகத்தில் வசூல் செய்தன. அதே மாதத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் தமிழகத்தில் 33 கோடி ரூபாய் வசூல் செய்தது.

இதைத்தொடர்ந்து மே மாதம் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் வெளியானது. அப்பா -  மகன் செண்டிமென்ட்டை வைத்து எடுக்கப்பட்ட அந்த திரைப்படம்,  தமிழகத்தில் 70 கோடி ரூபாய் வசூல் செய்தது.  அத்துடன் சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற பெயரையும் பெற்றது.

வலிமை, பீஸ்ட், கே.ஜி.எஃப்-2, டான் ஆகிய திரைப்படங்கள் நல்ல வசூலை ஈட்டிய நிலையில், கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் ஜூன் மாதம் வெளியானது.  இந்த திரைப்படத்தை தமிழகத்தில் மினிமம் கேரன்டி என்ற அடிப்படையில் 25 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய தயாரிப்பு நிறுவனம் முயற்சித்து வந்தது.

ஆனால் ரெட் ஜெயண்ட் நிறுவனம் அந்தப் படத்தை டிஸ்ட்ரிபியூஷன் அடிப்படையில் தமிழகத்தில் வெளியிட்டது. யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த திரைப்படம் பெரும் வசூலை ஈட்டியது.  அதுவும் தமிழகத்தில் 175 கோடி ரூபாய் வசூலித்து தமிழகத்திலேயே அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற பெயரையும் பெற்றது. இதன் மூலம் தமிழகத்தில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த நடிகர்கள் பட்டியலில் முதல் முறையாக இணைந்தார் கமல்ஹாசன்.

diwali 2022, diwali 2022 movies in tv, tamil movies for diwali 2022, beast sun tv, vikram vijay tv, don kalaignar tv, kgf2 zee tamil, deepavali 2022, tamil calendar deepavali 2022, diwali 2022 date delhi, 5 days of diwali 2022, diwali 2022 date in india calendar, dussehra diwali 2022, தீபாவளி படங்கள், பீஸ்ட் சன் டிவி, டான் கலைஞர் டிவி, விக்ரம் விஜய் டிவி, விஜய், கமல் ஹாசன், சிவகார்த்திகேயன், thalapathy vijay, kamal haasan, sivakarthikeyan

ஜூன் மாதத்திற்கு பிறகு தமிழ் திரையுலகில் சற்று தொய்வு ஏற்பட்டது இருந்தாலும் ஜூலை மாதம் வெளியான யானை திரைப்படம் 18 கோடியும் ஆகஸ்ட் மாதம் வெளியான விருமன் திரைப்படம் 51 கோடியும் தமிழகத்தில் வசூல் செய்தன இதைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் 65 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு 25 கோடி என்ற அளவில் வசூலித்ததாக கூறப்படுகிறது.

Read More: விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் இலவச சிலம்பாட்ட பயிற்சி! ஆர்வம் காட்டும் சிறுவர்கள்!

இந்தப் படங்களைத் தொடர்ந்து, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி உள்ள பொன்னியின் செல்வன் வசூலில் பெரும் சாதனை படைத்துள்ளது. இந்த திரைப்படம் வெளியாகி 14 நாட்களிலேயே 170 கோடி ரூபாயை தமிழகத்தில் கடந்துள்ளது. மேலும் இந்த வார இறுதிக்குள் 190 கோடி ரூபாயை வசூலை பொன்னியின் செல்வன் எட்டும். இதன் மூலம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற சாதனையை பொன்னியின் செல்வன் நிகழ்த்தும் என திரை துறையினர் உறுதியாக கூறுகின்றனர்.

diwali 2022, diwali 2022 movies in tv, tamil movies for diwali 2022, beast sun tv, vikram vijay tv, don kalaignar tv, kgf2 zee tamil, deepavali 2022, tamil calendar deepavali 2022, diwali 2022 date delhi, 5 days of diwali 2022, diwali 2022 date in india calendar, dussehra diwali 2022, தீபாவளி படங்கள், பீஸ்ட் சன் டிவி, டான் கலைஞர் டிவி, விக்ரம் விஜய் டிவி, விஜய், கமல் ஹாசன், சிவகார்த்திகேயன், thalapathy vijay, kamal haasan, sivakarthikeyan

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி இந்த 12 படங்கள் மூலம் மட்டுமே,  ஆயிரத்து 12 கோடி ரூபாய் மொத்த வசூல் கிடைத்துள்ளது. இது தவிர, வீட்ல விசேஷம், இரவின் நிழல், லெஜெண்ட், வாரியர் உள்ளிட்ட மற்ற படங்கள் மூலம் 100 கோடி கிடைத்திருக்கலாம் என கூறுகின்றனர். இதன் மூலம் முதல் பத்து மாதங்களில் மட்டும் ஆயிரத்து 100 கோடி ரூபாய் தமிழக திரையரங்கு வசூல் கிடைத்துள்ளது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட சினிமா துறையினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழக வசூல் விவரம்: (கோடியில்)

வலிமை - ₹ 105

ஆர்.ஆர்.ஆர் - ₹ 75

பீஸ்ட் - ₹110

டான் - ₹70

கே.ஜி.எஃப்-2 - ₹115

காத்துவாக்குல ரெண்டு காதல் ₹33

விக்ரம் - ₹175

யானை - ₹18

விருமன் - ₹51

திருச்சிற்றம்பலம் - ₹65

வெந்து தணிந்தது காடு - ₹25

பொன்னியின் செல்வன் - ₹170*

(* தொடர்ந்து திரையிடப்படும் படம்)

இந்த ஆண்டு வெளியான மற்ற படங்கள் மூலம் ₹100 கோடி வசூல் செய்துள்ளது.

Published by:Srilekha A
First published:

Tags: Kollywood, Tamil Cinema, Tamil cinema news