ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Kamal Haasan: கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே... நடிகர் கமல் ஹாசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

Kamal Haasan: கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே... நடிகர் கமல் ஹாசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

கமல் ஹாசன் - மு.க.ஸ்டாலின்

கமல் ஹாசன் - மு.க.ஸ்டாலின்

எந்த ஒரு குறிப்பிட்ட மொழியிலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள விரும்பாத நடிகர் கமல், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்வித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகர் கமல் ஹாசனின் 68-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

  ஒரு நடிகர் பன்முகத்தன்மை கொண்டவராக இருக்கலாம். ஆனால் கமல்ஹாசனை போல பன்முகத் திறமை கொண்டவராக இருப்பது அரிது. நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், நடன இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் மற்றும் அரசியல்வாதி என பல இறக்கைகள் கொண்ட மூத்த நடிகர். பார்வையாளர்களை கவர்வதில் இருந்து விமர்சகர்களை கவர்வது வரை அவரால் செய்ய முடியாததென்று ஒன்றுமில்லை. 1960ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன் இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

  எந்த ஒரு குறிப்பிட்ட மொழியிலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள விரும்பாத நடிகர் கமல், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்வித்துள்ளார். இன்று அவரது 68-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாள் வாழ்த்துகளை நடிகர் கமல் ஹாசனுக்கு தெரிவித்துள்ளார்.

  அதில், “தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்புத்தோழர் திரு.கமல் ஹாசன் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: CM MK Stalin, Kamal Haasan