• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • National Awards: தேசிய விருது பெறுபவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

National Awards: தேசிய விருது பெறுபவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

தேசிய விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு இன்று டெல்லியில் விருது வழங்கப்பட்டு வருகிறது.

  • Share this:
    தேசிய விருது பெறுபவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    தேசிய திரைப்பட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் 2019-ம் ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் 2019-ம் ஆண்டிற்கான 67-வது தேசிய விருதுகள் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது.

    இதில் சிறந்த படமாக வெற்றிமாறனின் அசுரனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகரான தனுஷ் அறிவிக்கப்பட்டார். அதேபோல் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக சிறந்த குணச்சித்திர நடிகர் (துணை நடிகர்) விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. விஸ்வாசம் படத்துக்காக சிறந்த இசையமைப்பாளராக டி.இமானும், பார்த்திபனின் ஒத்த செருப்பு திரைப்படத்துக்கு சிறப்பு ஜூரி சிறந்த ஒலிப்பதிவு ரசூல் பூக்குட்டிக்கு விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த குழந்தை நட்சத்திரமாக நாக விஷாலுக்கு (கருப்புதுரை) தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து தேசிய விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு இன்று டெல்லியில் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விருது பெறும் பிரபலங்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.



    இது தொடர்பான ட்விட்டர் பதிவில், ”நேசத்துடன் திரைக்கலையைப் போற்றி தரமான படங்கள் வழியே நம் நெஞ்சங்களில் இடம்பிடித்து, இப்போது #NationalFilmAwards பெறும் வி கிரியேஷன்ஸ், வெற்றிமாறன், விஜய் சேதுபதி, தனுஷ், பார்த்திபன், இமான் மற்றும் நாக விஷால் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: