பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ள கன்னட படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகிறது.
2 கைகளையும் இழந்து, நீச்சலில் சர்வதேச அளவில் சாதனைகளை படைத்த விஸ்வாசின் வாழ்க்கையை மையமாக வைத்து கன்னடத்தில் புதிய திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது. கே.எஸ்.விஸ்வாஸ் 10 வயதாக இருக்கும்போது, கர்நாடக மாநிலம் கோலாரில் வேளாண் துறையில் எழுத்தராக இருந்த அவரது தந்தை சத்தியநாராயண மூர்த்தியுடன், அவர்கள் கட்டிக்கொண்டிருந்த வீட்டில் சிமென்ட் பூசப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தபோது, திடீரென நிலைதடுமாறி மின்வயர்களில் விழுந்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் இவரை காப்பாற்ற முயற்சித்த அவரது தந்தை சத்தியநாராயண மூர்த்தி உயிரிழந்துள்ளார்.
அந்த விபத்திலிருந்து மீட்கப்பட்ட விஸ்வாஸ் கோமாவில் இருந்துள்ளார். 2 மாதங்களுக்குப் பிறகு நினைவு திரும்பிய பிறகு தான், 2 கைகளையும் தான் இழந்தது தெரிய வந்திருக்கிறது. பின்னர் அவர்கள் குடும்பத்துடன் பெங்களூருக்கு குடிபெயர்ந்துள்ளனர். அங்கு நம்பிக்கை இழக்காமல் பி.காம் பட்டப்படிப்பு முடித்த நிலையில், குங் பூ, நடனம், நீச்சல் உள்ளிட்ட கலைகளை கற்றுக்கொண்டுள்ளார் விஸ்வாஸ். அத்துடன் சர்வதேச பாரா நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு பல சாதனைகளை படைத்து வருகிறார்.
விஸ்வாஸின் வாழ்க்கையால் மிகவும் ஈர்க்கப்பட்ட கன்னட இயக்குநர் ராஜ்குமார், அதை மையமாக வைத்து ‘அரபி’ (‘Arabbie’) என்ற படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீவிஜய ராகவேந்திரா புரடொக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகியது. இந்த படத்தில் தமிழக பாஜக தலைவரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை, விஸ்வாஸின் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார்.
அஜித் குடும்பத்துடன் தயாநிதி அழகிரி... வைரலாகும் படம்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அரபி
திரைத்துறையை சேராத அதே நேரத்தில் பரவலாக அறியப்பட்ட ஒருவரை இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்த நேரத்தில், அண்ணாமலையை அணுகியிருக்கிறார்கள். கதையால் ஈர்க்கப்பட்ட அண்ணாமலை 1 ரூபாய் மட்டும் சம்பளமாக பெற்றுக் கொண்டு அரபி படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று மாலை இந்தப் படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.