Tamil Cinema: கொரோனா கட்டுப்பாடுகளால் ஓடிடி-யில் வெளியாக வேண்டிய நிர்பந்தத்தில் திரைப்படங்கள்!

விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன்

மீண்டும் விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகளால் திரையரங்குகளில் வெளியாக இருந்த புதிய திரைப்படங்கள், OTT தளங்களில் வெளியாகும் நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பை இங்கே பதிவிடுகிறோம்.

  • Share this:
    மீண்டும் விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகளால் திரையரங்குகளில் வெளியாக இருந்த புதிய திரைப்படங்கள், OTT தளங்களில் வெளியாகும் நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பை இங்கே பதிவிடுகிறோம்.

    தமிழ் திரை உலகின் போக்கை ஒட்டுமொத்தமாக கொரோனா ஊரடங்கு புரட்டிப் போட்டு விட்டது. திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் என்று இருந்த பெரிய நடிகர்களின் திரைப்படங்களும், ஓடிடியில் தஞ்சமடைய தொடங்கிவிட்டன. கொரோனா முதல் அலையின் போது, சூர்யாவின் சூரரைப்போற்று, ஜோதிகா நடிப்பில் உருவான பொன்மகள் வந்தாள், நயன்தாரா நடிப்பில் உருவான மூக்குத்தி அம்மன் ஆகிய திரைப்படங்கள் நேரடி ஓடிடி ரிலீசாக வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்தன. இதனை தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களும் தற்போது இரண்டாவது அலை அச்சம் காரணமாக ஓடிடி கதவுகளை தட்டி உள்ளன.

    விஜய் சேதுபதி நடிப்பில் டெல்லி பிரசாத் இயக்கத்தில் அரசியல் நையாண்டி திரைப்படமாக உருவாகியுள்ள துக்ளக் தர்பார் திரைப்படம், திரையரங்கில் வெளியாக காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்பொழுது திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் காரணமாக, ஹாட்ஸ்டார் வலைதளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஊரடங்கு கட்டுப்பாடுகளால் நேரடி ஓடிடி திரைப்படமாக இந்தப்படம் மாறியுள்ளது.

    இதேபோல நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் தற்போது நேரடியாக ஹாட்ஸ்டார் அல்லது நெட்ப்ளிக்ஸ் வலைதளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அனிருத் இசையில் அண்மையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை நீண்ட நாட்கள் ரிலீசுக்காக காத்திருக்க செய்ய முடியாது என்ற காரணத்தால், நேரடியாக ஓடிடியில் களம் இறங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்னும் நீடிக்கும் பட்சத்தில் இன்னும் சில திரைப்படங்களும் இந்த பட்டியலில் இணையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: