தோர் அஜித்... அயன்மேன் விஜய்... தமிழ் நடிகைகளின் சாய்ஸ் என்ன?

மார்வல் ஹீரோ தோர் கதாபாத்திரத்திற்கு அஜித் பொருத்தமாக இருப்பார் என்று தமன்னா கூறினார்.

தோர் அஜித்... அயன்மேன் விஜய்... தமிழ் நடிகைகளின் சாய்ஸ் என்ன?
நடிகைகள் தமன்னா, சமந்தா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்சிங்
  • News18
  • Last Updated: March 1, 2019, 7:14 PM IST
  • Share this:
மார்வல் ஹீரோக்களின் கதாப்பாத்திரங்களில் தமிழ் ஹீரோக்கள் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தமிழ் ஹீரோயின்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

சென்னை சத்தியம் திரையரங்கில் ‘கேப்டன் மார்வல் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. விழாவில் தழிழ் முன்னனி நடிகைகளான தமன்னா, சமந்தா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முதல் முறையாக மார்வல் ஸ்டுடியோஸில் பெண் சூப்பர் ஹீரோவாக நடித்திருக்கும் முதல் திரைப்படம் ‘கேப்டன் மார்வல் ‘என்பதால் நடிகைகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.


ALSO READ: அதுமாதிரி படங்களில் நடிக்கப்போவதில்லை - தமன்னாவின் திடீர் முடிவு!

இந்த நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகைகள் தமன்னா, சமந்தா, காஜல் அகர்வால் முதன்முறையாக மார்வல் படத்தில் பெண் சூப்பர் ஹீரோவாக நடித்திருப்பது பெருமைக்குரியது என்று தெரிவித்துள்ளனர்.

நடிகைகள் தமன்னா, சமந்தா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்சிங்
மேலும் மார்வல் ஹீரோக்களின் கதாப்பாத்திரங்களில் தமிழ் ஹீரோக்கள் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு  நடிகைகள் சமந்தா, தமன்னா பதிலளித்தனர்.

அதில் மார்வல் ஹீரோ தோர் கதாப்பாத்திரத்திற்கு அஜித் பொருத்தமாக இருப்பார் என்று தமன்னா கூறினார். மேலும் அயன்மேன் கதாபாத்திரத்திற்கு நடிகர் விஜய்யும் ஹல்க் கதாபாத்திரத்திற்கு நடிகர் ஆர்யாவும் பொருத்தமாக இருப்பார்கள் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

Also Read... தீவிரவாதம் உலகம் முழுக்க ஒழிக்கப்பட வேண்டும் - நடிகை தமன்னா

Also see...

First published: March 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading