ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

திரைப்படங்களுக்கான ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும் - அமைச்சருக்கு கோரிக்கை வைத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

திரைப்படங்களுக்கான ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும் - அமைச்சருக்கு கோரிக்கை வைத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

அமைச்சருக்கு கோரிக்கை வைத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

அமைச்சருக்கு கோரிக்கை வைத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

திரைப்படங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தினர் மத்திய அமைச்சர் எல்.முருகனிடம் கோரிக்கை. 

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

திரைப்படங்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். 

ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்திய பிறகு திரைப்படங்களுக்கு 18% ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது. அது தவிர 10 சதவீதம் TDS தொகை வசூலிக்கப்படுகிறது.  இது தங்களுக்கு கடுமையான சுமையை ஏற்படுத்துவதாக தயாரிப்பாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

மேலும் இந்த வரியை குறைக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தனர். இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் மத்திய இணை அமைச்சர் எம்.முருகனை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.

அதில் திரையரங்கு வெளியீடு தொலைக்காட்சி உரிமம் டிஜிட்டல் உரிமம் உள்ளிட்ட திரைப்படங்களின் வியாபாரங்களுக்கு வசூலிக்கப்படும் 18 சதவீத ஜி.எஸ்.டி வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும்,  மற்றும் 10% வசூலிக்கப்படும் டி.டி.எஸ் தொகையை இரண்டு சதவீதமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

Also read... வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் குவிந்த ரசிகர்கள்... விஜயின் செயலால் கொண்டாட்டம்!

ஏற்கனவே பலமுறை கடிதம் மூலமாக தங்கள் கோரிக்கையை வைத்த நிலையில் தற்போது மாஸ்டர் திரைப்பட தயாரிப்பாளர் லலித்குமார், அம்மா கிரியேஷன் டி.சிவா, பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே. செல்வமணி, நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்டோர் நேரடியாக டெல்லி சென்று தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சரை சந்தித்து கோரிக்கையை வைத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Tamil cinema Producer council