நடிகர் பாபி சிம்ஹாவுக்கு ரெட் கார்டு?

நீதிமன்றத்தில் பாபி சிம்ஹா தொடுத்த வழக்கை வாபஸ் பெறாவிட்டால் அவரை எந்த புதுப்படத்திலும் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Web Desk | news18
Updated: March 28, 2019, 6:43 PM IST
நடிகர் பாபி சிம்ஹாவுக்கு ரெட் கார்டு?
நடிகர் பாபி சிம்ஹா.
Web Desk | news18
Updated: March 28, 2019, 6:43 PM IST
நடிகர் பாபி சிம்ஹாவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜான் பால்ராஜ் - ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவான படம் அக்னி தேவி. இந்தப் படத்தில் நடிகை மதுபாலா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் போது இயக்குநருக்கும் பாபி சிம்ஹாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை தற்போது விஸ்வரூபமெடுத்துள்ளது.

இந்தப் படத்தின் மீது வழக்கு தொடுத்த நடிகர் பாபி சிம்ஹா, அக்னி தேவி படத்தில் 5 நாட்கள் தான் நடித்தேன். எனக்குப் பதிலாக வேறு ஒருவரை டூப்பாக வைத்து படத்தை வெளியிட்டுள்ளார்கள். இயக்குநர் ஜான் பால்ராஜ் சொன்ன கதைக்கு மாறாக வேறொரு கதையைப் படமாக்கினார். நான் நடித்த காட்சிகளை எனக்கு காண்பிக்கவில்லை. எனவே இந்தப் படத்தில் தொடர்ந்து நடிக்கவில்லை” என்றார்.

இதைத்தொடர்ந்து பரங்கிமலை காவல் துணை ஆணையரிடமும் பாபி சிம்ஹா புகாரளித்தார். இதனால் இயக்குநர் ஜான் பால்ராஜ் மீது நந்தம்பாக்கம் காவல்நிலையத்தில் ஆள்மாறாட்டம், மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்தப் பிரச்னை தொடர்பாக பாபி சிம்ஹா - படத்தயாரிப்பாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது விஷால் தலைமையிலான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். ஆனால் நீதிமன்றத்தில் இந்தப் பிரச்னைக்கு தீர்வுகாண உள்ளதாக நடிகர் பாபி சிம்ஹா தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அக்னி தேவி படத்துக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்காத நிலையில், தடைவிதித்ததாக கூறி தகவல் பரப்பியதாகவும் பாபி சிம்ஹா மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து பாபி சிம்ஹாவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு போடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. படம் தொடர்பாக நீதிமன்றத்தில் பாபி சிம்ஹா தொடுத்த வழக்கை வாபஸ் பெறாவிட்டால் அவரை எந்த புதுப்படத்திலும் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading...
என்னை போல் டூப்பை வைத்து எடுத்த படம் அக்னிதேவி - நடிகர் பாபி சிம்ஹா பேட்டி

First published: March 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...