Home /News /entertainment /

‘இந்தியாவையே தமிழ் திரையுலகம் திரும்பி பார்க்கச் செய்துள்ளது’ – தேசிய விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு கமல்ஹாசன் பாராட்டு

‘இந்தியாவையே தமிழ் திரையுலகம் திரும்பி பார்க்கச் செய்துள்ளது’ – தேசிய விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு கமல்ஹாசன் பாராட்டு

கமல் - சூர்யா

கமல் - சூர்யா

Kamal on NFA : தேசிய விருது அறிவிக்கப்பட்ட தமிழ் திரையுலகினருக்கு அரசியல் பிரபலங்கள், முன்னணி நட்சத்திரங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் திரைக் கலைஞர்களுக்கு வாழ்த்து  கூறியுள்ள கமல்ஹாசன் இந்தியாவையே தமிழ் திரையுலகம் திரும்பி பார்க்க வைத்துள்ளதாக பாராட்டியுள்ளார்.

    68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில், சூரரைப் போற்று படத்திற்கு சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை, சிறந்த நடிகர், சிறந்த நடிகை ஆகியவற்றுக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

    வசந்த் இயக்கத்தில் வெளிவந்த சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு சிறந்த தமிழ் படம், சிறந்த துணை நடிகை, சிறந்த எடிட்டிங் ஆகிய பிரிவுகளில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்ததில் மகிழ்ச்சி.. அபர்ணா பாலமுரளி நியூஸ் 18 தமிழுக்கு பேட்டி!

    சிறந்த வசனகர்த்தா மற்றும் அறிமுக இயக்குனருக்கான விருதுகள் யோகி பாபு நடித்த மண்டேலா படத்திற்கு அறிவிக்கப்பட்டன.

    ஒட்டுமொத்தமாக தமிழ் திரையுலகிற்கு இந்தாண்டு 10  தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

    தனுஷ், அக்சய் குமார் உள்பட பிரபலங்களின் பாராட்டு மழையில் சூரரைப் போற்று படக்குழு...

    அரசியல் பிரபலங்கள், முன்னணி நட்சத்திரங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன், இந்தியாவையே தமிழ் திரையுலகம் திரும்பி பார்க்க வைத்திருப்பதாக வாழ்த்தியுள்ளார்.



    இதுதொடர்பாக கமல் தனது ட்விட்டர் பதிவில், ‘சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது பெருமையளிக்கிறது. சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா என ஒட்டுமொத்தமாக 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம். விருதாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.’ என்று கூறியுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Suriya, Kamal Haasan

    அடுத்த செய்தி