Home /News /entertainment /

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா பாதிப்பு... தடுப்பூசி செலுத்திக்கொள்ள ரசிகர்களுக்கு வலியுறுத்தல்

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா பாதிப்பு... தடுப்பூசி செலுத்திக்கொள்ள ரசிகர்களுக்கு வலியுறுத்தல்

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

இதுவரைக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருந்தால், அவசியம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். இதை செய்தால் மட்டுமே உங்களையும், உங்கள் அன்புக்கு உரியவர்களையும் பாதுகாக்க முடியும். - கீர்த்தி

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மிகுந்த எச்சரிக்கையாக இருந்தும், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், பொதுமக்கள் அனைவரும் தவறாது தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கங்களில் கூறியிருப்பதாவது-

    லேசான அறிகுறிகளுடன் எனக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மிகுந்த கவனமாக இருந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டேன். இருப்பினும், எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் பரவலின் வேகம் நம்மை அச்சுறுத்துகிறது.



    தயவு செய்து கொரோனா தடுப்பு விதிமுறைகள் அனைத்தையும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். நான் இப்போது என்னை தனிமைப்படுத்திக் கொண்டதுடன், கொரோனாவுக்கான சிகிச்சை எடுத்து வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தங்களை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதுவரைக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருந்தால், அவசியம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். இதை செய்தால் மட்டுமே உங்களையும், உங்கள் அன்புக்கு உரியவர்களையும் பாதுகாக்க முடியும்.

    இதையும் படிங்க : நான் தரக்குறைவாக எதுவும் சொல்லவில்லை - சாய்னா ட்வீட் குறித்து சித்தார்த் விளக்கம்

    கொரோனா தொற்றிலிருந்து விரைவில் மீண்டு வந்து, படப்பிடிப்புக்கு செல்வேன்று என்று நான் நம்புகிறேன். அன்புடன், கீர்த்தி சுரேஷ்.

    இவ்வாறு கீர்த்தி தனது சமூக வலைதள பதிவுகளில் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க : அவரை எனக்குப் பிடிக்கும் - சித்தார்த் ட்வீட்டுக்கு பதிலடி தந்த சாய்னா நேவால்!

    கீர்த்தி சுரேஷ் கடந்த 2000-ம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின்னர் ஹீரோயினாக ஜொலித்து வருகிறார். தமிழில் அவரது நடிப்பில் வெளிவந்த ரெமோ, ரஜினி முருகன், பைரவா, சர்கார், மகாநதி உள்ளிட்ட படங்கள் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தன.

    இதையும் படிங்க : என்னை அவமானப்படுத்த முயற்சிகள் நடந்துள்ளன - மனம் திறந்த பாவனா

    நடப்பாண்டில் தெலுங்கில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக சர்காரு வாரி பாட்டா என்ற படத்திலும், தமிழில் சாணி காயிதம் என்ற படத்திலும் கீர்த்தி நடித்து வருகிறார். இதைத் தவிர்த்து தெலுங்கில் போலா சங்கர், தசரா, மலையாளத்தில வாஷி ஆகிய படங்களில் கீர்த்தி இடம்பெற்றுள்ளார்.

     

     

     
    Published by:Musthak
    First published:

    Tags: Keerthy suresh

    அடுத்த செய்தி