ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

OTT: ஓடிடி பக்கம் கவனத்தை திருப்பும் தமிழ் சினிமா!

OTT: ஓடிடி பக்கம் கவனத்தை திருப்பும் தமிழ் சினிமா!

சூர்யா - விஜய்

சூர்யா - விஜய்

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள அஜித்தின் வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் அடுத்த ஆண்டு துவக்கத்தில் தள்ளிப்போகாவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 6 minute read
  • Last Updated :

கொரோனா ஊரடங்கு மக்களின் வாழ்க்கை முறை மட்டுமல்லாது பொழுதுபோக்கிலும் பெரிய மாறுதலை உண்டாக்கியுள்ளது. வாரம் ஒரு முறை திரையரங்கிற்கு சென்று விடுவதை வழக்கமாக வைத்திருந்த சினிமா ரசிகர்கள் பலருக்கும் கூட திரையரங்கிற்கு செல்லும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்திலிருந்து திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு மூடப்பட்ட நிலையில், திரையரங்குகளில் திரைப்படம் வெளியாவது குறைந்து, நேரடி OTT பழக்கம் தமிழ் சினிமாவில் துவங்கியது.

ஜோதிகா நடிப்பில் உருவான ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் ஊரடங்கு காலத்தில் நேரடியாக OTT தளத்தில் வெளியான முக்கியமான திரைப்படமாக மாறியது. திரையரங்குகள் திறக்கப்படாத காலகட்டத்தில் தமிழ் சினிமா வர்த்தகத்திற்கு இணையதள வெளியீடு லாபகரமாக இருக்கும் என்ற புதிய பாதையை இந்த திரைப்படம் உருவாக்கி கொடுத்தது. இதனையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் இதனை மேலும் உறுதி செய்தது. சூர்யாவின் அசத்தலான நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு OTT தளங்களில் வெளியான திரைப்படங்களில் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்து பல சாதனைகளை படைத்தது. அதிக பொருட்செலவில் உருவாகும் பெரிய திரைப்படங்களையும் நேரடியாக OTTயில் பெரிய விலைக்கு விற்பனை செய்ய முடியும் என்ற புதிய பார்முலாவை உருவாக்கியது.

' isDesktop="true" id="480263" youtubeid="nlASIDhXtuE" category="cinema">

இதேபோல நயன்தாரா நடிப்பில் உருவான மூக்குத்தி அம்மன் திரைப்படம் நேரடி OTT ரிலீசாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. OTT ரிலீஸ்லிலேயே டிக்கெட் முறையில் படம் பார்க்கும் புதிய முறையை விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த க/பெ ரண சிங்கம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது. சூர்யா, விஜய் சேதுபதி போன்ற பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் OTT-யில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பழக்கப்படாததன் காரணமாக விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படத்தையும் கையகப்படுத்த OTT நிறுவனங்கள் ஆர்வம் காட்டின. திரையரங்க வெளியீட்டில் உறுதி காட்டிய மாஸ்டர் படக்குழுவினர் பொங்கல் தினத்தில் திரைப்படத்தை வெள்ளித்திரைக்கு கொண்டு வந்தனர்.

' isDesktop="true" id="480263" youtubeid="fRD_3vJagxk" category="cinema">

50 சதவீத இருக்கை கட்டுப்பாடு இடையே வெற்றிகரமாக ஓடிய மாஸ்டர் திரைப்படத்தை 15 நாட்களுக்குள்ளாகவே OTT-யிலும் ரிலீஸ் செய்தனர். இது அடுத்து திரைக்கு வந்த கர்ணன், சுல்தான் ஆகிய திரைப்படங்களும் திரையரங்கில் வெளியான சில நாட்களிலேயே OTT-யிலும் வெளியாகி ரசிகர்களுக்கு தீனியாக அமைந்தது.

' isDesktop="true" id="480263" youtubeid="ARKpiClpoyU" category="cinema">

தற்போது மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு உள்ள நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரின் ரிலீஸ் திட்டமும் மாறி உள்ளது. விக்ரம் நடிப்பில் 2019-ஆம் ஆண்டு கடாரம் கொண்டான் திரைப்படம் வெளியான நிலையில் இதையடுத்து விக்ரம் நடிக்கும் திரைப்படமான கோப்ரா படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. மாஸ்டர் திரை படத்தின் தயாரிப்பாளரான லலித் தான், கோப்ரா படத்தையும் தயாரித்துள்ளதால் மாஸ்டர் திரைப்படத்தின் வர்த்தகத்தின் போதே கோப்ரா திரைப்படத்திற்கான வர்த்தகத்தையும் ஏறத்தாழ பேசி முடித்தார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் பல மாறுபட்ட தோற்றங்களில் நடித்துள்ள இந்த திரைப்படம், ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போதுள்ள சூழலில் மேலும் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தாமதமாகலாம் என தெரியவந்துள்ளது. வெளிநாடுகளில் திரைப்படத்தின் ஒரு சில காட்சிகளை படமாக்கப்பட வேண்டி உள்ளதால் இதற்கு இன்னும் சில காலம் ஆகும் என திரையுலக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். வெளிநாடுகளில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகளை தமிழ் நாட்டிற்குள்ளேயே செட் அமைத்து படமாக்கினாலும் தற்பொழுது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் உடனடியாக அதற்கும் சாத்தியமில்லை என்பதால் கோப்ரா திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில்தான் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

' isDesktop="true" id="480263" youtubeid="Dj6DPX53Vfk" category="cinema">

இதேபோல வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவின் மாநாடு திரைப்படமும் படப்பிடிப்பு நிறைவடைந்த பின்னரும் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகாமல் தாமதமாகி வருகிறது. இத்திரைப்படத்தில் மாநாடு தொடர்புடைய காட்சிகள் அதிகம் உள்ளதால் படப்பிடிப்பிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்த நாட்களில் குறிப்பிட்ட காட்சிகளை எடுக்க முடியாமல் தடுமாறி வந்த மாநாடு படக்குழுவினர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது படத்தின் முக்கியமான காட்சிகளை படமாக்கினர். மே மாதம் ரம்ஜான் விடுமுறை குறிவைத்து இந்த திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தாமதமான காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இதையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டதால் மாநாடு திரைப்படம் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டு நிலைமை சீரான பின்னர் வெளியாகும் என தெரியவந்துள்ளது.

' isDesktop="true" id="480263" youtubeid="sRRuOfgz10U" category="cinema">

இந்த வரிசையில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படமும் பிரதான இடத்தை பிடித்துள்ளது. அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில் திரைப்படத்தை மார்ச் மாத இறுதியிலேயே திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் ஆயுத்தம் ஆகினர். தேர்தல் பரபரப்பு உச்சமடைந்து நிலையில் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வேறு தேதிக்கு தள்ளிவைத்தனர். ஆனால் இதன் பின்னர் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் தற்போதுவரை டாக்டர் திரைப்படம் வெளியாகாமல் தாமதமாகி வருகிறது. தற்போதுள்ள சூழலில் மீண்டும் திரையரங்குகள் திறக்க காலதாமதம் ஏற்படும் என்பதால் இந்த திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் விலை பேசி வருகிறது. மறுமுனையில் திரைப்படத்தை வெளியிட ஹாட்ஸ்டார் நிறுவனமும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் விரைவிலேயே இந்த திரைப்படம் OTT-யில் வெளியாகலாம் என சொல்லப்பட்டது. ஆனால் படத்தின் பட்ஜெட் நினைத்ததை விட எகிறியதால் இப்படத்தை திரையரங்குகளுக்கு கொண்டு வந்தால் மட்டுமே லாபம் பார்க்க முடியும் என தயாரிப்பாளர் எண்ணுவதாகவும், அதனால் டாக்டர் படம் ஓடிடி-யில் வெளிவருமா அல்லது தியேட்டரில் வெளிவருமா என்பதில் தற்போதுவரை குழப்பம் நீடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

' isDesktop="true" id="480263" youtubeid="tRgdAvFccIo" category="cinema">

கர்ணன் திரைப்படத்தை அடுத்து தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தை ஜூன் மாதம் 18-ஆம் தேதி நேரடியாக OTTயில் வெளியாகிறது. பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் திரைப்படம் என்பதாலும் ஜகமே தந்திரம் திரைப்படம் கூடுதல் கவனம் பெறுகிறது. திரையரங்கில் இந்த திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் பல முயற்சிகளை மேற்கொண்ட போதும் அடுத்தடுத்த நெருக்கடிகளால் Netflix தளத்தில் இந்த திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.

இதேபோல மாஸ்டர் திரைப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படம் நீண்ட நாட்களாக படப்பிடிப்பு துவங்காமலே காத்துக்கொண்டு இருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கான முன்னோட்டம் தயாரிக்கப்பட்ட நிலையில் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்திய கமல்ஹாசன், மீண்டும் படப்பிடிப்பு பணிகளுக்கு திரும்புவதற்குள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக விக்ரம் திரைப்படம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கமல்ஹாசன் நடிக்கும் இந்த திரைப்படத்தில் அவருடன் நடிக்க விஜய் சேதுபதி பகத் பாசில் என முன்னணி நடிகர்கள் பலருடனும் தற்போது வரை பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே இருக்கிறது.

இந்த வரிசையில் கொரோனா அச்சத்திற்கு இடையேயும் மிகுந்த பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தி பலரையும் ஆச்சரியப்படுத்தியது அண்ணாத்த படக்குழு. சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நயன்தாரா குஷ்பூ மீனா கீர்த்தி சுரேஷ் என பலரும் நடிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகுந்த பாதுகாப்புக்கு இடையே ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் உடல் நலனை கருதி அவருக்கு பலத்த பாதுகாப்பு கொடுத்த படக்குழுவினர் யாரும் அவர் அருகே நெருங்காமல் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். எதிர்வரும் தீபாவளி தினத்தில் திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ள போதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் திட்டமிட்டபடி படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதேபோல ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள அஜித்தின் வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் அடுத்த ஆண்டு துவக்கத்தில் தள்ளிப்போகாவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் இந்தத் திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளபோதும் திரைப்படத்தின் முக்கியமான சேசிங் காட்சி ஒன்று வெளிநாட்டில் படமாக்க பட வேண்டி உள்ளதால் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய இந்த ஆண்டு இறுதி ஆகிவிடும் என கூறப்படுகிறது இதன் காரணமாக அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே வலிமை திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

' isDesktop="true" id="480263" youtubeid="gcvOanDvc5U" category="cinema">

இந்த வரிசையில் மாஸ்டர் திரைப்படத்தை அடுத்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் விஜய்யின் 65-வது திரைப்படமும் துவங்கிய நிலையிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்கான செட் பணிகள் நடைபெற்ற போதே ஊரடங்கு அமலுக்கு வந்ததால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே ரிலீஸுக்கு திட்டமிடப்பட்ட இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதேபோல பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 40 திரைப்படம், ஆரம்பித்த வேகத்திலேயே முடங்கியுள்ளது. கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கி வரும் இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கிய நிலையில் நோய் தொடரின் பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. நடிகர் சூர்யா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்ட காரணத்தால் ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்னரே பாதுகாப்பு கருதி படப்பிடிப்பை படக்குழுவினர் நிறுத்தினர். எனினும் சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷலாக ஜீலையில் டைட்டிலை அறிவித்து இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் இப்படத்தை திரைக்கு கொண்டுவரும் முயற்சியில் படக்குழு இறங்கியுள்ளனர். சூரரைப் போற்று படம் சூர்யாவுக்கு பெரும் புகழை பெற்று தந்ததால் இந்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இவை தவிர தமிழில் எதிர்பார்க்கப்படும் பிறமொழி திரைப்படங்களான கே ஜி எஃப், RRR ஆகிய திரைப்படங்களும் அறிவிக்கப்பட்ட தேதியை காட்டிலும் இன்னும் பல நாட்கள் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கே ஜி எஃப் படத்தின் இரண்டாம் பாகம் ஜூலையில் வெளியாவதாக இருந்தது. ஆனால் தற்போதுள்ள சூழலில் இதற்கு வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. மேலும் இந்தியா முழுவதும் பல மொழிகளில் இப்படம் வெளியாவதால் இந்தியா முழுவதுமே எப்போது கொரோனாவின் தாக்கம் குறையுமோ அப்போதுதான் இப்படம் திரைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்படும் தரமான படங்களின் பக்கம் தற்போது ஒடிடி நிறுவனங்களின் பார்வையும் திரும்பியுள்ளது. அந்தவகையில் நயன்தாராவின் நெற்றிக்கண், விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி, கார்த்திக் நரேனின் நரகாசூரன் என அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

' isDesktop="true" id="480263" youtubeid="KoOhWrDfzvo" category="cinema">

ஒட்டுமொத்த வாழ்க்கை முறையும் மாறியுள்ள நிலையில் ரசிகர்களின் பொழுதுபோக்கு எதிர்பார்ப்பிலும் கொரோனா பெரும் மாறுதல்களை உருவாக்கி உள்ளது. திரைப் படங்களின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதையும் திரைப்படங்களில் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதையும் நாம் செய்தியாக கடந்துவிடும் இந்த நேரத்தில் எண்ணற்ற திரைப்படத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவது கொடுமையிலும் கொடுமையாக உள்ளது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட காரணங்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட சினிமா தொழில் தற்பொழுது ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக முற்றிலும் சிதைக்கப்பட்ட நிலையில் மீண்டும் திரைத்துறை பழைய நிலைக்குத் திரும்ப மேலும் பல ஆண்டுகள் ஆகும் என்பதே திரை விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Ajith, Actor Suriya, Actor Thalapathy Vijay, Tamil Cinema