முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Maniratnam-Ilaiyaraaja: தமிழ் சினிமாவின் வெற்றி கூட்டணி - மணிரத்னமும் இளையராஜாவும்!

Maniratnam-Ilaiyaraaja: தமிழ் சினிமாவின் வெற்றி கூட்டணி - மணிரத்னமும் இளையராஜாவும்!

இளையராஜா - மணிரத்னம்

இளையராஜா - மணிரத்னம்

வசனங்களைக் குறைத்து காட்சிகளில் கச்சிதமாக கதை சொல்லும் மணிரத்னம், இசையால் கதை சொல்லும் இளையராஜா என இருவரும் சேர்ந்து கொடுத்த கொடையின் பிரம்மாண்டம் `தளபதி' திரைப்படம்.

  • News18 Tamil
  • 5-MIN READ
  • Last Updated :

தமிழ் சினிமாவின் அமுதும் தேனும்… நிலவும் வானும் போன்றதான ஒரு கூட்டணி என்றால் அது இளையராஜா மணிரத்ணம் கூட்டணி என்றுதான் சொல்ல வேண்டும். இந்த கூட்டணியில் வெளிவந்த படைப்புகள் தமிழ் சினிமாவின் வரலாற்று பக்கங்களில் க்ளாஷிக் பக்கங்களை நிறைத்தது.

இசையை தன் வசமாக்கி காலத்தால் மீண்டும் கொடுக்க முடியாத மாபெரும் இசைக் கலைஞன் இளையராஜா. தமிழ் சினிமாவின் தொன்றுதொட்ட மரபுகளை உடைத்து காட்சி வடிவத்திற்கு உயிர் கொடுப்பது மணிரத்னத்தின் ஸ்டைல். ஒரு காட்சியின் உணர்வை பார்வையாளனுக்குள் கடத்த குறைவான வசனங்களே போதும் என காட்சி மொழியின் கதாநாயகனான மணிரத்னத்தின் படங்களில் நிலவும் அமைதிகூட பார்வையாளர்களை அசைத்து பார்த்ததுண்டு. காரணம் அந்த அமைதியில் உணர்வுகளை இசையாக படரவிட்டவர் இளையராஜா. இப்படியாக மணிரத்னத்தின் காட்சி மொழியும் இளையராஜாவின் இசை மொழியும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து தமிழ்த் திரையுலகையும் அதன் பரிமாணங்களையும் மாற்றியமைத்த கதைகள் ஏராளம். இளையராஜாவின் எவர்க்ரீன் பாடல்களைப் பட்டியலிட்டால் அதில் மணிரத்னத்தின் பாடல்கள் நிச்சயமாக இடம் பிடித்து மணிரத்னம் – இளையராஜா காம்போ ஒரு கோல்டன் காம்போ அன சொல்லும்.

' isDesktop="true" id="484267" youtubeid="PS6xcEsCkZM" category="cinema">

1983-ஆம் ஆண்டில் 'பல்லவி அனுபல்லவி' என்னும் கன்னட படத்தில் தொடங்கிய இந்த பார்ட்னர்ஷிப் 1991 –ஆம் ஆண்டு 'தளபதி' திரைப்படம் வரை நீடித்தது. இவர்களின் முதல் திரைப்படமான 'பல்லவி அனுபல்லவி' திரைப்படத்தின் தீம் இசை அன்று மட்டும் அல்ல இன்றும் கூட ஒரு வைரல் இசை எனலாம். இன்றும் இந்த தீம் இசையை பலரது அலைபேசியில் அழைப்பு மணியாக நாம் கேட்கலாம்.

' isDesktop="true" id="484267" youtubeid="bFKpiN_CLfM" category="cinema">

தமிழ் சினிமாவில் இளையராஜா-மணிரத்னம் இருவரும் முதன்முறையாக ஒன்றிணைந்த திரைப்படம் ’பகல் நிலவு’ . முரளி-ரேவதி இணைந்து நடித்திருந்த இத்திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் இப்போதும் அமோக வரவேற்பை பெற்றிருப்பதை பார்க்கலாம். படத்தின் கதாபாத்திரங்களில் யாருக்குமே ஒப்பனை இல்லாமல் வில்லன் பாத்திரத்தை இயன்ற அளவில் இயல்பாக சித்தரிக்க முயன்ற முதல் திரைப்படமாகவும் அமைந்தது இந்த பகல் நிலவு. குறிப்பாக இளையராஜாவின் இன்னிசையில் பூத்த ’பூமாலையே தோள் சேர வா’ பாடல் திரையரங்கில் இளையும் பொழுது காதல் மனங்கள் இணையும் அற்புதத்தை நிகழ்த்தியது இசையும் காட்சியும்.

' isDesktop="true" id="484267" youtubeid="GFuEHbVFtiE" category="cinema">

இசையை என்றுமே உணர்வை கடத்தும் ஊடகமாக பயன்படுத்தும் மணிரத்னத்துக்கு தன் முழு பலத்தையும் கொடுத்தவர் இளையராஜா என்றால் அது மறுப்பதற்கில்லை. அதற்கு சாட்சியாக அமைந்தது அடுத்து இவர்களின் கூட்டணியில் வெளிவந்த ‘இதயகோவில்’ திரைப்படம். மோகன் அம்பிகா ராதா நடித்திருந்த இத்திரைப்படத்தின் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி படத்தின் வெற்றிக்கு பக்க பலமாக அமைந்தன.

' isDesktop="true" id="484267" youtubeid="PNwq36we9FM" category="cinema">

இளையராஜாவின் குரலில் வரும் ‘இதயம் ஒரு கோவில்..அதில் உதயம் ஒரு பாடல்’ என்ற பாடலில் பாடல்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை என இளையராஜாவின் குரல் மேலெழும்பும் போது உயிர் தொலைத்தனர் இசை ரசிகர்கள். அத்தோடு இளையராஜா முதல்முறையாக எழுதிய முழு பாடல் என்ற சிறப்பும் இப்பாடலுக்கு உண்டு.

' isDesktop="true" id="484267" youtubeid="RcZQFjA_UYU" category="cinema">

இளையராஜா - மணிரத்னம் என்ற காம்போவைக் கேட்டதும் சட்டென நம் நினைவிற்கு வருவது பின்னணி இசைதான். ஒவ்வொரு படத்துக்குமான பின்னணி இசை அந்தப் படத்தின் கதையைச் சொல்லிவிடும். இதற்கு கட்டியம் கூறியது ‘மௌனராகம்’ திரைப்படம். 1986-ல் மணிரத்னத்தின் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் …மோகன், ரேவதி, கார்த்திக் நடிப்பில் வெளிவந்த மௌனராகம் காதல் காவியத்திலும் கரை கண்டவர் மணிரத்தனம் என்பதை இப்போதும் சொல்லும். படத்தோடு பயணிக்கும் இசை கதையின் ஒலிப் பரிமாணமாய் விளங்குவதை இப்போதும் இசை ரசிகர்கள் பேசுவதை கவனிக்கலாம்.

இத்திரைப்படத்தின் பாடல்களைப் பற்றி எவ்வளவு பேசினாலும் பேசி கொண்டே போகலாம். இதில் இடம்பெற்ற மன்றம் வந்த தென்றலுக்கு, சின்ன சின்ன வண்ணக்குயில், நிலாவே வா போன்ற பாடல்கள் அன்றைய மட்டுமல்ல இன்றைய தலைமுறையையும் ரசிக்க வைத்து. பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

' isDesktop="true" id="484267" youtubeid="NNLzxnmXrvc" category="cinema">

காட்சிகளை கலை நேர்த்கியுடன் செதுக்கும் மணிரத்னத்துக்கு இளையராஜாவின் இசை எப்படி ஒரு உளியாக உயிரூட்டியது என்பதை மவுனராகம் திரைப்படத்தின் பல காட்சிகள் சொல்லியது. மோகன் தன் மனைவி ரேவதியிடம் முதல்முறையாக என்ன வேண்டும் என்று கேட்பார். அதற்கு அவர் விவாகரத்து வேண்டும் என்பார். அப்போது அக்காட்சியில் ஒலிக்கும். எஸ்பிபி யின் குரலும் பின்னாள் வரும் இசையும் ரசிகர்களை காட்சியோடு ஒன்ற வைத்திருக்கும்.

காட்சிக்கு இசையா? இசைக்கு காட்சியா? என குழம்பும் அளவுக்கு இவர்களது கூட்டணி படைப்புகளில் இரண்டும் பின்னிக்கிடக்கும். திரையில் அமைதியை நிலவவிட்டு திடீரென பின்னணியில் இளையராஜாவை உலவவிடுவார் மணிரத்னம். அவ்வளவு நேர அமைதியையும் இளையராஜாவின் இசை மெல்ல விழுங்கி திரையெங்கும் இசை நிரம்பும் அதிசயம் மணிரத்னத்தின் எல்லா படங்களிலும் உண்டு. அப்படியான ஒரு திரைப்படம்தான் படம்தான் 1987-ல் கமலஹாசன், நடிப்பில் வெளிவந்த ’நாயகன் திரைப்படம்.

' isDesktop="true" id="484267" youtubeid="P7DhhNgdShc" category="cinema">

ஒரே ஒரு வரியை மீட்டுவதன் மூலம் படத்தின் சாரத்தை நமக்குள் கடத்திவிடும் மாயம் இளையராஜாவுக்கு மட்டுமே சாத்தியமானது. அதற்கேற்ற காட்சி மொழியைத் திரையில் எழுதுவது மணிரத்னத்துக்கு மட்டுமே சாத்தியமானது. ஆம்… ’தென்பாண்டிச் சீமையிலே’ பாடலின் பல்லவி படங்களின் பல்வேறு தருணங்களில் பின்னணியில் ஒலித்து பார்வையாளர்களை உலுக்கி எடுத்திருப்பதே இதற்கு சாட்சி.

' isDesktop="true" id="484267" youtubeid="QS4R7hV-ntM" category="cinema">

மவுன ராகத்துக்குப் இந்தக் கூட்டணியில் வெளியான இந்த ‘நாயகன்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்டது. இப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களுமே ஹிட்டடித்தன. குறிப்பாக படத்தின் இறுதிகாட்சியில் கமல்ஹாசனின் பேரன் கமல்ஹாசனிடம் நீங்க நல்லவரா? கெட்டவரா? என கேகும் போது ஒலிக்கும் சப்தம் ரசிகனை கரையவைத்து இன்றும் நினைப்பில் வைத்திருப்பதை பார்க்கலாம்.

மணிரத்னத்தின் காட்சி மொழியும்…இளையராஜாவின் இசை மொழியும் மீண்டும் இணைந்த திரைப்படம் ‘அக்னி நட்சத்திரம்’ பிரபு, கார்த்திக், அமலா, நிரோஷா நடிப்பில் வெளிவந்த அக்னி நட்சத்திரம். இரண்டு சகோதரர்களுக்கு இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை மிக தத்ரூபமாக சொல்லியது. அத்தத்ரூபத்திற்கு பக்கபலமாக இளையராஜாவின் இன்னிசையும் இணைந்து அக்னி நட்சத்திரத்தை பிளாக்பஸ்டர் ஹிட் ஆக்கியது.

' isDesktop="true" id="484267" youtubeid="wAtR2LRHU_o" category="cinema">

பாடல்களில் என்றுமே தான் ஒரு ராஜாதி ராஜந்தான் என்பதை தன் ஒவ்வொரு பாடலிலும் சொன்ன இளையராஜாவுக்கு காட்சி மொழியின் பிதாமகன் மணிரத்னம் அக்னினட்சத்திர திரைப்படத்தில் வைத்த அக்னி பரிட்சையில் இருவருமே வெற்றி பெற்றனர். நாயகன் படத்துக்கும் அக்னி நட்சத்திரம் படத்துக்கும் ஒரே நேரத்தில்தான் பாடல் கம்போஸிங் பணிகள் நடைபெற்றன. ஆனால் இரண்டு படங்களின் இசைக்கும் அத்தனை வேறுபாடுகளை காட்டியிருப்பார் இளையராஜா. காலையில் நாயகன் படத்துக்கு ஒரு பீரியட் படத்துக்கான இசை கருவிகளை கொண்டும் இரவில் அக்னி நட்சத்திரம் படத்துக்கு அல்ட்ரா மாடர்ன் கருவிகளை கொண்டும் இசையமைத்து அசத்தியிருப்பார்.

தமிழ் சினிமாவில் காதல் கதைகளை ஒரு காவியமாய் சொல்லிட மணிரத்னத்திற்கு நிகர் மணிரத்னம்தான் என மீண்டும் சொல்லியது நாகார்ஜுனா நடிப்பில் வெளிவந்த ‘இதயத்தை திருடாதே’ திரைப்படம். இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இப்போதும் காதலர்களின் காதல் கீதம்தான் என அடித்து சொல்லலாம். முந்திய படங்களை போலவே இந்த படத்தின் பாடல்களும் படத்தின் வெற்றிக்கு பக்க பலமாக நின்றன. மேலும் மணிரத்னம் படங்களுக்கென ஸ்பெஷலாக தீம் இசையை உருவாக்கிவிடும் இளையராஜா, இந்த படத்துக்கும் அற்புதமான ஓர் தீம் இசையை கொடுத்து மெய் சிலிரிக்க வைத்திருப்பார்.

' isDesktop="true" id="484267" youtubeid="aBLrQACci1I" category="cinema">

மனிரத்னம் இளையராஜா கூட்டணி மீண்டும் சாகசம் செய்த திரைப்படம் ‘அஞ்சலி’. ரகுவரன், ரேவதி, ஷாமிலி ஆகியோர் நடித்திருந்த இத்திரைப்படம் இளையராஜாவின் 500-வது படமாக ஆனது. இத்திரைப்படத்தின் துள்ளலான இசையும்…… இறுதிகாட்சியின் மனம் கனக்கும் இசையும் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுவதை பார்க்கலாம். ஆம்.. ’அஞ்சலி அஞ்சலி’ பாடலில் ஒளி ஓவியத்தோடு இசை வண்ணமும் கலக்கப்பட்டு என்றும் ரசிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வசனங்களைக் குறைத்து காட்சிகளில் கச்சிதமாக கதை சொல்லும் மணிரத்னம், இசையால் கதை சொல்லும் இளையராஜா என இருவரும் சேர்ந்து கொடுத்த கொடையின் பிரம்மாண்டம் `தளபதி' திரைப்படம். இந்த இருவருக்கும் மட்டுமல்ல நூறாண்டு கடந்தாலும் தமிழ் சினிமாவின் முக்கியமானதொரு திரைப்படமாக ஆனது இது. ரயிலின் ஓசை, சூரியனின் அந்திமம், ஏக்கப்பார்வை, காதலின் பிரிவு என்று அனைத்திற்கும் இத்திரைப்படத்தில் இசை செய்திருந்தார் இளையராஜா.

ரஜினிகாந்த் மம்மூட்டி நடிப்பில் வெளியான இத்திரைப்படம் கிளாசிகல் வெற்றியடைந்தது. ராக்கம்மா கையைத் தட்டு, காட்டுக்குயிலு மனசுக்குள்ள போன்ற பாடல்கள் காலத்தை வென்ற பாடல்களாக இன்றளவும் போற்றப்படுவதை பார்க்கலாம். குறிப்பாக “ராக்கம்மா கையத்தட்டு” பாடல் அதிக மக்களால் விரும்பிய பாடலாக BBC யால் தேர்வு செய்யப்பட்டு அசத்தியது.

' isDesktop="true" id="484267" youtubeid="AyUe_BWqoOE" category="cinema">

தளபதி படத்தின் ஒவ்வொரு பாடலும் அன்றைய தேதியில் ரசிகர்களின் தேசிய கீதமாக மாறின. ஹீரோ எண்ட்ரிக்கு ஒரு பாடல், நட்புக்கு ஒரு பாடல், தாய் பாசத்துக்கு ஒரு பாடல், காதல் உணர்வுக்கு ஒரு பாடல் என இசை ரசிகர்களுக்கு ஒரு பெரும் விருந்தையே படைத்தார் இளையராஜா. இதில் ஒவ்வொரு பாடலும் வெற்றி பெற்றதோடு காலத்துக்கும் அவர் பெயர் சொல்லும் பாடலாக அமைந்து சரித்திரம் படைத்தது.

இப்படத்தின் காட்சியில் காதல் கைகூடாத நிலையில் தன் நிலையை ரஜினியிடம் சொல்லி அழுவார் ஷோபனா... அப்போது தேங்கிய கண்களோடு ` கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இரு.. போ.. ’ என்று சொல்லி முடித்து திரும்பும் ரஜினிகாந்துக்கு மீண்டும் ஆறுதல் தரும் இளையராஜாவின் வயலின் இசை. ஆம். பிரிந்து செல்லும் காதலையெண்ணி தவிக்கும் மனதுக்கு ஆறுதல் சொல்லி கண்ணீரை வரவழைத்திருப்பார் இசைஞானி.

' isDesktop="true" id="484267" youtubeid="kPYSxl6fwJk" category="cinema">

’தளபதி’ திரைப்படத்தின் ஒரு காட்சியில் மணிரத்னத்தின் காட்சி மொழியும் இளைராஜாவின் இசை மொழியும் ஓர் ரம்மியத்தை கொடுத்திருக்கும். ஆம்…முகம் தெரியாத தன் தாயை நினைத்து ஏங்கி கொண்டிருக்கும் மகன் மற்றும் அந்த மகனுக்காக ஏங்கி கொண்டிருக்கும் அந்த தாய் இருவரும் பல வருடங்களுக்கு பிறகு ஒரே கோவிலில் நின்று கொண்டிருப்பார்கள் அப்போது அவர்கள் இருவரின் இணைப்பு புள்ளியான கூட்ஸ் வண்டியின் சத்தம் பின்னணியில் கேட்பதாக அமையும் அந்த காட்சி பலரின் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக இப்போதும் இருப்பதை பார்க்கலாம். காட்சி வடிவில் கதையை நகர்த்துவதன் அவசியத்தை உணர்த்திய இந்த ஒரு காட்சி எப்போதும் சொல்லி கொண்டிருக்கும் இளையராஜாவும் மணிரத்னமும் அமுதும் தேனும் என்று.

இப்படியாக நாயகன், தளபதி, மெளனராகம் படங்களின் மூலம் காலத்தால் அழியாத ஹிட் திரைப்படங்களை கொடுத்த இந்தக் கூட்டணி, தளபதி திரைப்படத்துக்குப் பின் பிரிந்தது. அதன்பின் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்த மணிரத்னம் தொடர்ந்து அவருடனே பயணம் செய்து வருகிறார். எனினும் இந்தக் கூட்டணி. ஏதாவது ஒரு திரைப்படத்தில் மீண்டும் ஒன்றிணை வேண்டும் என்பதே இசை பிரியர்களின் விருப்பமாக உள்ளது. இதை இளையராஜா 75 நிகழ்ச்சியில் மணிரத்னத்திடமே நேரடியாக கேட்டுவிட்டார் இளையராஜாவின் புதல்வர் கார்த்திக் ராஜா. இதற்கு தம்ஸ் அப் காட்டி ஓகே சொல்லியிருப்பார் மணிரத்னம். ஒருவேளை இது நடக்காவிட்டாலும் காலத்தால் வெல்ல முடியாத பல சூப்பர் ஹிட் பாடல்களையும் பின்னணி இசையையும் வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை இந்த கூட்டணி அடைந்துள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Ilaiyaraja, Ilayaraja