அமெரிக்காவில் செட்டிலாகியுள்ள நடிகர் நெப்போலியன் அங்கு விவசாயம் பார்க்கும் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக இருப்பவர் நெப்போலியன். 90 களில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த நெப்போலியன், கடந்த சில ஆண்டுகளாக படங்களை வெகுவாக குறைத்துக் கொண்டார்.
1963-ம் ஆண்டு திருச்சியில் பிறந்த அவர், பாரதி ராஜா இயக்கத்தில் வெளிவந்த புதுநெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகரான அறிமுகம் ஆனார்.
தொடர்ந்து அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த படங்களில் நடித்து வந்த நெப்போலியனுக்கு ஆக்சன் ஹீரோ என்ற பெயர் கிடைத்தது. ரஜினி நடித்த எஜமான் உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும் நடித்து ரசிகர்கள் மனத்தில் நெப்போலியன் இடத்தை பிடித்திருக்கிறார்.
இதையும் படிங்க - செம்ம ஹாட்டாக புகைப்படம் வெளியிட்ட மீரா ஜாஸ்மின்..
போக்கிரி படத்தில் விஜய்யுடன் அவர் நடித்தது பரவலாக பேசப்பட்டது. திமுகவில் எம்பியாக இருந்து பின்னர் மத்திய சமூக நலத்துறை இணை அமைச்சர் பொறுப்பிலும் இருந்துள்ளார்.
அமெரிக்காவில் செட்டிலாகியுள்ள நெப்போலியன் அங்குள்ள டென்னசே மாகாணத்தில் உள்ள நேஷ்வில்லே நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் வசிக்கும் பகுதியிலும் விவசாயம் செய்து வருவதாக நெப்போலியன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க - நடிகர் ரன்பீர் கபூரின் பிரம்மாஸ்த்ரா படத்திற்கு டப்பிங் பேசிய சிரஞ்சீவி
இந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் ரசிக்கப்படுகிறது.
கடந்த 2014-ல் பாஜகவில் இணைந்த நெப்போலியன் தற்போதுவரை அந்த கட்சியில் தொடாகிறார். அவருக்கு தனுஷ், குணால் என 2 மகன்கள் உள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.