Home /News /entertainment /

இனி இஷ்டத்திற்கு சினிமா விமர்சனம் செய்ய முடியாது… கட்டுப்பாடுகளை கொண்டு வருகிறது தயாரிப்பாளர்கள் சங்கம்…

இனி இஷ்டத்திற்கு சினிமா விமர்சனம் செய்ய முடியாது… கட்டுப்பாடுகளை கொண்டு வருகிறது தயாரிப்பாளர்கள் சங்கம்…

சினிமா விமர்சனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம். .

சினிமா விமர்சனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம். .

ஒரு படம் உண்மையிலேயே தரமானதாக இருந்தாலும் கூட, விமர்சகர்கள் ஏற்படுத்தும் மன ரீதியிலான எதிர்மறை தாக்கம், படத்தின் வசூலை பாதித்து விடுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    யூ டியூப் உள்பட சமூக வலைதளங்களில் சினிமா விமர்சனங்களை செய்வதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கட்டுப்பாடுகளை கொண்டு வரவுள்ளது.

    திரைப்பட வசூலில் சமூக வலைளதங்கள் பெரும் தாக்கத்தை கடந்த சில ஆண்டுகளாக ஏற்படுத்தி வருகின்றன. ஒரு படத்தைப் பற்றிய நெகடிவான கருத்தை ரசிகர்களிடம் திணிக்கும்போது, அவர்கள் பெரும்பாலும் அந்த படத்தை தவிர்த்து விடுகிறார்கள்.

    இதேபோன்று கடந்த சில வாரங்களாக பாய்காட் என்ற பிரசாரம் சமூக வலைதளங்களில் நடந்தது. இதன் அடிப்படையில் மிகவும் திறமைவாய்ந்த கலைஞர்களின் படங்கள் கூட, படுதோல்வியை சந்தித்ததாக விமர்சனங்கள் எழுந்தன.

    ஒரு படம் உண்மையிலேயே தரமானதாக இருந்தாலும் கூட, விமர்சகர்கள் ஏற்படுத்தும் மன ரீதியிலான எதிர்மறை தாக்கம், படத்தின் வசூலை பாதித்து விடுகிறது. இந்நிலையில் படம் வெளியான 3 நாட்களுக்கு பின்னரே விமர்சனங்களை சமூக வலைதளங்களில் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கொண்டு வரவுள்ளது.

    கருப்பு நிற உடையில் ரசிக்க வைக்கும் மேகா ஆகாஷ்..

    சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் தேனாம்பேட்டை கலைஞர் அரங்கத்தில் நேற்று காலை நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் என். ராமசாமி தலைமை வகித்தார். சங்கத்தின் துணை தலைவர்கள் கதிரேசன், ஆர்.கே. சுரேஷ், கவுரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திர பிரகாஷ் ஜெயின் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் முன்னாள் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்பட 500க்கும் அதிகமான தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    AK61: அஜித்தின் ஏகே61 படத்தின் தலைப்பு இதுவா?

    இதில் சிறு முதலீட்டு திரைப்படங்களை சங்கத்தின் வர்த்தக அறக்கட்டளை மூலம் ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்டு தயாரிப்பாளர்கள் பயனடையும் வண்ணம் வழி வகை செய்யப்படும், திரைப்படங்களின் விமர்சனங்களை படம் ரிலீசான தேதியில் இருந்து சமூக வலைதளங்கள் 3 நாட்கள் கழித்து விமர்சனம் எழுதுமாறு பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.

    திரைப்படங்களையும், நடிகர், நடிகையர் உள்ளிட்ட திரைத்துறையினர் மீது தனிப்பட்ட முறையில் அவதூறாக பொய் செய்தி பரப்பும் ஊடகவியலாளர்களுக்கு எந்த வித பேட்டியும் திரைத்துறையினர் தருவதை தவிர்க்குமாறு இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மேலும்  தியேட்டர்களில் படம் பார்த்த பின் கருத்து கேட்பதற்காக கொண்டு வரும் கேமராக்களை திரையரங்குகளின் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என திரையரங்கு உரிமையாளர்களை இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்வதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood

    அடுத்த செய்தி