முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் தேதி அறிவிப்பு

தயாரிப்பாளர்கள் சங்கம்

தயாரிப்பாளர்கள் சங்கம்

விண்ணப்பங்களை திரும்பப் பெறுவதற்கு 05.03. 2023 கடைசி நாள் ஆகும். அன்று மாலை 6 மணி அளவில் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு வெளியிடப்படும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது- கடந்த ஜனவரி 23ஆம் தேதி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் 2023 - 26 ஆம் ஆண்டிற்கான நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 26.03.2023  ஞாயிற்றுக்கிழமை நடத்தலாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, 23.02.2023 காலை 11 மணி முதல் 26.02.2023 மாலை 5 மணி வரை வேட்பு மனுக்கள் வழங்கப்படும் எனவும் பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்களை 2.3.2023 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை திரும்பப் பெறுவதற்கு 05.03. 2023 கடைசி நாள் ஆகும். அன்று மாலை 6 மணி அளவில் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு வெளியிடப்படும். இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் 26.03.2023 காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 5 மணிக்கு மேல் நடைபெறும். இவ்வாறு தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

First published:

Tags: Kollywood