• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.. மாலைக்குள் முடிவுகள் வெளியாக வாய்ப்பு..

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.. மாலைக்குள் முடிவுகள் வெளியாக வாய்ப்பு..

Youtube Video

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலின் முடிவுகள் இன்று மாலைக்குள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியுள்ளது. 1303 வாக்காளர்களைக் கொண்ட சங்கத்தில் 1,500 வாக்குகள் நேற்று பதிவானது. டி ராஜேந்தர் தலைமையிலான ஒரு அணியும் முரளி தலைமையிலான ஒரு அணியும் களத்தில் உள்ளனர். இது தவிர, எந்த சங்கத்திலும் இல்லாத தேனப்பன் தனியாக தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

    இதே போல, பொருளாளர் பதவிக்கு ஜே.எஸ்.கே.சதீஷ் மற்றும் செயலாளர் பதவிக்கு கதிரேசனும் போட்டியிடுகின்றனர். செயற்குழு உறுப்பினர் பதவிக்கு இரண்டு குழுக்களும் போட்டியிடுகின்றனர். மொத்தம் 1300 உறுப்பினர்களைக் கொண்ட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பொறுப்பு வகிப்பர்.

    மேலும் படிக்க.. கட்சியை பதிவு செய்ய வேண்டாம் - தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஏ.சி கடிதம்



    வாக்குப்பதிவு முடிந்த அன்றே மாலையில் தலைவர் உள்ளிட்ட ஆறு பதவிகளுக்கான பெயர்கள் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

    ஆனால் சங்க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அனைத்துப் பதவிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை இன்று நடத்தப்படுகிறது. இன்று மாலைக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: