போலி ஆவணங்களை பயன்படுத்தி அவதூறு - சினிமா தயாரிப்பாளர் தாணு போலீசில் புகார்

தான் கையெழுத்திட்டதாக போலி ஆவணங்களை சமூகவலைதளத்தில் அவதூறு பரப்புவதாக தயாரிப்பாளர் தாணு போலீசில் புகாரளித்துள்ளார்.

போலி ஆவணங்களை பயன்படுத்தி அவதூறு - சினிமா தயாரிப்பாளர் தாணு போலீசில் புகார்
தயாரிப்பாளர் தாணு
  • Share this:
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீசாரிடம், ஜீலை 3-ம் தேதி ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், சினிமா ஃப்யூச்சர் என்ற வாட்ஸ்அப் குரூப்பில்,  தான் திருமலை என்பவரிடம் 50 லட்ச ரூபாய் கடன் பெற்றதாகவும் அதை ஒரு வருடத்தில் திருப்பி கொடுத்ததாகவும் தன் கையெழுத்திட்டதாக போலி ஆவணங்களை சமூகவலைதளத்தில் பரப்பி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அந்த வாட்ஸ்அப் குரூப்பில், லிங்கா படப் பிரச்சினையில் தொடர்புடைய தயாரிப்பாளர் சிங்காரவேலன் மற்றும் கார்த்தி என்பவரும் அட்மின்களாக உள்ளனர் என தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரவுள்ள நிலையில் தன் மீது அவதூறு பரப்பும் வகையில் வாட்ஸ் அப் குரூப் அட்மின்களாக இருக்கின்ற தயாரிப்பாளர் சிங்காரவேலன் மற்றும் கார்த்தி என்பவரும், மேலும் அந்த ஆவணத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பிய ராஜ்குமார் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்தப் புகார் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விளக்கம் அளிக்க தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இன்று வந்திருந்தார்.


மேலும் படிக்க: Anil Murali | பிரபல நடிகர் அனில் முரளி காலமானார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களிடையே குழு அரசியல் இருப்பதாக மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருப்பது குறித்தும், குழு அரசியல் செய்வது நீங்கள் தான் என்று சமூகவலைதளத்தில் பேசப்படுகிறதே என்றும் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு விளக்கம் அளித்த கலைப்புலி எஸ்.தாணு, “சுரேஷ் காமாட்சி தெரிவித்தது போன்று தயாரிப்பாளர் சங்கத்தில் இல்லை எனவும், குழு அரசியல் இருப்பதாக கூறும் சுரேஷ் காமாட்சி இடமே விளக்கம் கேட்டு கொள்ளுமாறு தெரிவித்தார். மேலும் இயக்குநர் பாரதிராஜாவிற்கும் தனக்கும் எந்தவித பிரச்னை இல்லை என்றும், அவரது படைக்கு நான் முதல் தளபதி என்றும் கூறினார்.

இன்னும் சினிமா செய்திகளை படிக்க ஸ்க்ரோல் செய்க..
First published: July 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading